சில நாட்களாக நெஹ்ராவின் ஒய்வு குறித்து வந்த செய்தியை நேற்று உறுதி செய்தார் ஆஷ்ஷ் நெஹ்ரா. நவம்பர் 1ஆம் தேதி நியூசிலாந்து உடனான டி20 போட்டி டெல்லியில் நடக்கிறது. இந்த போட்டியுடன் இந்திய இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா ஓய்வு பெறப்போகிறார்.

India’s Ashish Nehra, center, celebrates the wicket of New Zealand’s Adam Milne Colin Munro during the ICC World Twenty20 2016 cricket match at the Vidarbha Cricket Association stadium in Nagpur, India,Tuesday, March 15, 2016. (AP Photo/Saurabh Das)

ஆஸ்திரேலியத் தொடருக்குப் பின் நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டியில் விளையாடவுள்ளது.

இது குறித்து ஆசிஷ் நெஹ்ரா கூறியதாவது.

அது என்னுடைய முடிவாகும். நவம்பர் 1ஆம் தேதி எனது கடைசி டி20 போட்டி எனது சொந்த ஊர் மைதானத்தில் டெல்லியில் நடக்கவுள்ளது. எனது ஹோம் க்ரவுண்டில் ஓய்வு பெறுவது எனக்கு கிடைத்த பாகியமாகும். அதனை விட பெரிய ஒரு விசயம் தற்போது எனக்கு உள்ளதாகத் தெரியவில்லை.

இந்த தொடருக்கு தேர்வு செய்யப்படும் முன்பே கோலி மற்றும் ரவி சாஷ்திரியிடம் இது குறித்து கூறிவிட்டேன். தற்போது புவனேஷ்வர் மற்றும் ஜஸ்பிரிட் பும்ரா இருவரும் மிக அற்புதமாக பந்து வீசி வருகின்றனர். இது தான் என்னுடைய ஓய்வு நேரம் என புரிந்து கொண்டு நான் எனது முடிவை அறிவித்துள்ளேன்.

மேலும், அவர் ஒய்வு பெற்ற பிறகு ஐ.பி.எல் போட்டியில் விளையாடுவது குறித்து கூறினார்.

தற்போது இந்த முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவை எடுத்தால் எடுத்தது தான். எந்த வகையான போட்டியிலும் ஆட மாட்டேன். ஐ.பி.எல் போட்டியில் ஆடப் போவது இல்லை.

எனக்கு தற்போது 38 வயதாகிறது. என்னால் சரியாக  காலையில் எழுந்துகொள்ள முடியவில்லை. எனது மூட்டுகள் சரியாக எனகு ஒத்துழைக்க மறுக்கின்றன. ஒரு அரை மணி நேரம் கழித்து தான் படுக்கையை விட்டு எழுகிறேன் அந்த அளவிற்கு வயது என்னைத் தாகுகிறது.

வேகப்பந்து வீச்சாளருக்கு வயது மிக முக்கியமான காரணியாக அமைகின்றது. 38 வயதில் ஓடி வந்து பந்து வீசுவது சற்று கடினமான காரியமாகும். தற்போது என்னுடைய போட்டியில் தான் கவனம் செலுத்தி வருகின்றேன். ஒவ்வொரு போட்டியாக நன்றாக ஆட கவனம் செலுத்துகிறேன்.

இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஆட என் மனம் கூறுகிறது. ஆனால், என் உடல் ஒத்துழைக்க மறுக்கின்றது. என்னுடைய முழுத்திறமையையும் கொடுத்து ஆடி வருகின்றேன்.

 

எனக் கூறினார் ஆசிஷ் நெஹ்ரா.

தற்போது இந்திய அணியில் உள்ள வீரர்களில் இவரே மூத்த வீரர். தற்போது அவருக்கு 38 வயதாகிறது. 1999ல் அசாருதின் தலைமையில் தனது முதல் அறிமுகப் போட்டியில் ஆடினார் ஆசிஷ் நெஹ்ரா. 17 டெஸ்ட் போட்டிகள், 120 ஒருநாள் போட்டிகள் மற்றும் 26 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார் ஆசிஷ் நெஹ்ரா. அதில் 44 டெஸ்ட் விக்கெட்டுகளையும், 157 ஒருநாள் விக்கெட்டுகளையும் 34 டி20 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார் நெஹ்ரா.

இந்தியாவிற்க்காக விளையாடுவது யாருக்குத்தான் மகிழ்ச்சியாக இருக்காது? விமர்சனங்களை ஒருபோதும் நான் பொருட்படுத்தியது இல்லை. அவை என்னை சீண்டும் அள்விற்கும் இருந்தது இல்லை. ஏனெனில், இந்தியா வீரர்களுக்குத் தெரியும் நான் எப்படி விளையாடுவேன் என்று. கேப்டனுக்குத் தெரியும் அதே போல் தேர்வாளர்களுக்கும் தெரியும். நான் அணீய்ல் இருந்தால் கண்டிப்பாக எந்த வகையிளாவது அணிக்கு உதவும் எண்ணத்துடன் தான் இருப்பேன்.

எதிர் காலத்தில் என்ன நோக்கம் வைத்துள்ளீர்கள் எனக் கேட்டபோது, அவர் கூறியதாவது,

என்னுடைய வயதிற்க்கு நான் தற்போது எந்த நோக்கத்துடனும் செயல்படவில்லை. நான் தற்போது இந்திய அணிக்காக 3 போட்டிகள் விளையாட தேர்வாகியுள்ளேன் அவ்வளவு தான். ஒரு நேரத்தில் ஒரு ஆடும் அந்த ஒரு போட்டியைப் பற்றி மட்டுமே சிந்திப்பேன். நாம் நன்றாக விளையாடினால் அது ஒரு செய்தியாக வரும் , அதே வேலையில் நன்றாக விளையாடாவிட்டால் அது அதனை விட மிகப் பெரிய செய்தியாகும்.

ட்விட்டர் மற்றும் முகநூலில் என்னைப்பற்றி என்ன பேசுகிறார்கள் என எனக்குத் தெரியாது. தற்போது என்னைப் பற்றிய செய்திகள் வரலாம் ஏனெனில் நான் அனிக்குத் தேர்வாகியுள்ளேன். செய்திகளில் அடிபடாத கால கட்டங்களில் நான் என்னுடைய தினசரி வேலைகளான உடல்பயிற்சி செய்தல் மற்றும் பந்து வீச்சு பயிற்சி செய்தல் ஆகியவற்றை மேற்க்கோண்டேன். அவை தான் என்னுடைய கம்பேக்கிற்க்கு காரணம்.

 • SHARE

  விவரம் காண

  பிரேசில் – இங்கிலாந்து அரையிறுதி கவுகாத்தியில் இருந்து கொல்கத்தாவிற்கு மாற்றம்

  Football, Brazil, England, Kolkata, FIFA, World Cup
  U-17 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பிரேசில் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் கொல்கத்தாவிற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் U-17 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை...

  ஹிந்தியில் பதிலளித்து சேவாகின் வாயை மூடிய ராஸ் டெய்லர்

  Cricket, India, New Zealand, Virender Sehwag, Ross Taylor
  சமீபகாலமாக ட்விட்டரில் விரேந்தர் சேவாக் கலக்கி வருகிறார்கள். ஒரே வார்த்தையில் அனைவரையும் கலாய்க்க கூடிய வல்லமை படைத்தவர். அதில் சிலர் மட்டுமே தப்பிப்பார்கள். சேவாக்...

  பெரோஷா கோட்லா மைதானத்தின் 2வது கேட்டுக்கு சேவாக் பெயர்

  Cricket, BCCI, Virender Sehwag, Sourav Ganguly
  டெல்லியில் பிறந்து இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த விரேந்தர் சேவாக்கை கவுரவிக்க பெரோஷா கோட்லா மைதானத்தின் இரண்டாவது கேட்டுக்கு விரேந்தர் சேவாக்...

  டெல்லி டி20யில் நெஹ்ரா விளையாடுவாரா? உத்திரவாதம் இல்லை – எம்.ஸ்.கே பிரசாத்

  Cricket, India, New Zealand, Ashish Nehra, Retirement
  நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்காத ஆஷிஷ் நெஹ்ரா, மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டிக்கான...

  வீடியோ: புவனேஸ்வர் குமாருக்கு கும்பிடு போட்ட விராட் கோலி

  Cricket, India, New Zealand, Virat Kohli, Bhuvneshwar Kumar
  நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோற்றாலும், புவனேஸ்வர் குமாரின் அதிரடி மறக்கமுடியாததாக அமைந்துவிட்டது. இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி...