உணவு இடைவேளை நிலைமை : 78/0 தென்னாப்பிரிக்கா முன்னிலை, 1

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு செஞ்சூரியனில் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

கேப் டவுன் டெஸ்டில் காயம் அடைந்த டேல் ஸ்டெயினுக்குப் பதிலாக லுங்கி நிகிடி சேர்க்கப்பட்டுள்ளார். 21 வயதாகும் இவருக்கு இதுதான் அறிமுக டெஸ்ட்  ஆகும்.

இந்திய அணியில் தவான், விக்கெட் கீப்பர் சகா, வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஆகியோர் நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல், பார்தீவ் பட்டேல், இசாந்த் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.Cricket, India, New Zealand, Ranji Trophy, Karnataka, KL Rahul, Karun Nair

இந்திய அணி விவரம்:

விராத் கோஹ்லி, முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, ரோஹித் சர்மா, பார்தீவ் பட்டேல், ஹர்திக் பாண்டியா, அஸ்வின், முகமது ஷமி, பும்ராஹ், இஷாந்த் சர்மா

தென் ஆப்ரிக்கா அணி;

டீன் எல்கர், எய்டன் மார்க்கம், ஹசீம் அம்லா, ஏ.பி. டிவில்லியர்ஸ், ஃபாஃப் டூ பிளசிஸ், குயிண்டன் டி. காக், பிலேண்டர், கேசவ் மஹராஜ், ரபாடா, நெகிடி, மோர்னே மார்க்கல்.

மைதானம் எப்படி;

இன்று போட்டி நடைபெறும் செஞ்சூரியன் மைதானம் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமானது என்று ஆடுகள பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழீ தீர்க்க இந்திய அணியும், தொடரை வெல்லும் முனைப்பில் தென் ஆப்ரிக்கா அணியும் இன்றைய போட்டியில் களம் காண உள்ளதால், இரண்டாவது போட்டியில் பரபரப்பிற்கு நிச்சயம்  பஞ்சம் இருக்காது.

உணவு இடைவேளை நிலைமை : 78/0 தென்னாப்பிரிக்கா முன்னிலை, 2
இதனால் ஆச்சரியம் அடைந்த ரசிகர்கள் போட்டியை பார்த்து வருகின்றனர். தற்போது உணவு இடைவேலையின்படி, தென்னாப்பிரிக்க அணி 27 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 78 ரன் எடுத்து ஆபி வருகிறது.

தென்ஆப்பிரிக்கா அணியின் டீன் எல்கர், மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

தென்னாப்பிரிக்க அணியின் ஒப்பனர் எயிடன் மார்க்ரம் 89 பந்துகளுக்கு 51 ரன்னுடனும், டீன் எல்கர் 73 பந்துகளுக்கு 26 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *