Cricket, Champions Trophy, India, Sri Lanka, India Sri Lanka series

தற்போது இங்கிலாந்தில் மினி உலக கோப்பை என அழைக்க படும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், கடைசி கட்டத்தை எட்டி உள்ளது சாம்பியன்ஸ் டிராபி.

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் அரையிறுதி போட்டியில் மோதும் என எந்த கிரிக்கெட் ரசிகருமே நினைத்து பார்க்கவில்லை. தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று சாம்பியன்ஸ் டிராபி தொடரையே மாற்றியது. அதன் பிறகு, நியூஸிலாந்து அணிக்கு எதிராக வங்கதேச அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கான தகுதியை பெற்று அசத்தியது.

இலங்கையுடன் தோற்ற பிறகு சிங்கம் போல் எழுந்து தென்னாபிரிக்கா அணியை நசுக்கியது இந்தியா. அந்த வெற்றியால், அரையிறுதிக்கு தகுதி பெற்று வங்கதேசத்துடன் விளையாடபோகிறது இந்தியா. இந்நிலையில் இருநாட்டு ரசிகர்களும் இணைதளங்களில் எதிரணியை பற்றி அவதூறாக பேசி வருகின்றனர். கடைசியாக இரு அணிகளும் ஐசிசி தொடரில் 2015-உலக கோப்பையில் மோதியது, அந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற, அந்த போட்டி சர்ச்சையில் முடிந்தது.

இந்நிலையில், இந்த முறையும் கோப்பையை வெல்ல, அரையிறுதி போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தவேண்டும். நாங்கள் கீழே கொடுத்துள்ள அணி தான் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் என எதிர்பார்க்கிறோம்.

ஷிகர் தவான்

Cricket, Champions Trophy, India, Sri Lanka, Shikhar Dhawan, Virat Kohli, Record

இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக விளையாடி அதிக ரன் குவித்த ஷிகர் தவான், வியாழக்கிழமை நடக்கும் போட்டியில் வங்கதேச அணியுடன் சிறப்பாக ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு அரைசதம், ஒரு சதம் என தெறி பார்மில் உள்ளார் தவான். மூன்று போட்டிகளிலும் அவர் பெரிய ஷாட் அடிக்கும் போது தான் அவுட் ஆனார். இதனால், வங்கதேசத்துடன் இதே பார்மில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரோகித் சர்மா

Cricket, Champions Trophy, Inida, Pakistan, Rohit Sharma, Tweets

கடைசி போட்டியில் அடித்து ஆட முயற்சித்த போது மோர்னே மோர்கெலிடம் விக்கெட்டை பறிகொடுத்தார் ரோகித் சர்மா. காயத்தில் இருந்து மீண்டு 7 மாதம் கழித்து இந்திய அணிக்கு வந்த, வங்கதேசத்திடம் நன்றாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக இரு அணிகளும் ஐசிசி தொடரில் மோதிய போது, இந்த அணிக்கு எதிராக 137 ரன் விளாசி அசத்தினார் ரோகித். மேல்போர்ன் மைதானத்தில் அடித்தது போலவே வங்கதேசத்துக்கு எதிராக விளையாடுவார் என எதிர்பார்க்க படுகிறது.

விராட் கோலி

Cricket, Champions Trophy, India, South Africa, Virat Kohli, AB De Villiers, Yuvraj Singh

பயமில்லாத கேப்டன் விராட் கோலி, கடந்த இரண்டு வருடமாக இந்த ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார் விராட் கோலி. இந்த தொடரில் அவர் ஒரு முறை கூட சதம் அடிக்க வில்லை, அதனால் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சதம் எதிர்பார்க்க படுகிறது.

யுவராஜ் சிங்

Cricket, Champions Trophy, India, Bangladesh, Yuvraj Singh, Yuvraj Singh 300th ODI

பல நாட்கள் கழித்து இந்திய அணிக்கு திரும்பிய யுவராஜ் சிங், இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த சாம்பியன்ஸ் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தன்னுடைய அதிரடியை காட்டினார். இதனால், வங்கதேசத்திற்கு எதிராகவும் அவருடைய அதிரடியை காட்டுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மகேந்திர சிங் தோனி

Ms Dhoni, Ms Dhoni Six Video, Video, India, Champions Trophy, Virat Kohli, Cricket

2007-இல் இருந்து முதல் முறையாக கேப்டனாக இல்லாமல் ஐசிசி தொடரில் விளையாடுகிறார் மகேந்திர சிங் தோனி. இந்த சாம்பியன்ஸ் டிராபியில் அவருக்கு பேட்டிங் விளையாட அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் விளையாட ஒரே போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக அரைசதம் அடித்து அசத்தினார். அதற்கு பிறகு அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. வங்கதேசத்துக்கு எதிராக அவருக்கு பேட்டிங் விளையாட வாய்ப்பு கிடைத்தால், பந்துவீச்சாளர்களை ஒரு கை பார்ப்பார்.

கேதார் ஜாதவ்

Cricket, Champions Trophy, India, Bangladesh, Predicted India XI

இந்திய அணியில் கேதார் ஜாதவ் இருப்பது தப்பே இல்லை. இந்த மகாராஷ்டிரா வீரர் எதிர்கொள்ளும் முதல் பந்தில் இருந்தே அடித்து ஆடுகிறார். அதுமட்டும் இல்லாமல், கடைசி நேரத்திலும் சிறப்பாக பினிஷ் செய்கிறார். இதனால், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் வந்து வாணவேடிக்கை காட்டுவார் என எதிர்பார்க்க படுகிறது.

ஹர்டிக் பாண்டியா

Cricket, Champions Trophy, India, Pakistan, Hardik Pandya, Ms Dhoni, Virat Kohli

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் ஹர்டிக் பாண்டியா விளையாடியதை பல பேர் கேள்வி எழுப்பினர். ஆனால், முக்கியமான பாப் டு பிளெஸ்ஸிஸ் விக்கெட் எடுத்து அந்த கேள்விக்கு பதிலளித்தார். அவர் குறைவாக ரன் கொடுத்து ஓரிரு விக்கெட்டுகள் எடுத்தாலே போதும், மற்ற வீரர்கள் எதிரணியின் ரன்னை கட்டுப்படுத்துவார்கள்.

ரவீந்திர ஜடேஜா

Ravindra Jadeja, Ravindra Jadeja Wife, Ravindra Jadeja CT, Champions Trophy, India, Pakistan

இங்கிலாந்தில் இந்திய ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த தொடரில் அவருக்கு பேட்டிங் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், பேட்டிங் விளையாட வாய்ப்பு வந்தால் நன்றாக விளையாடி பினிஷ் செய்வர் என எதிர்பார்க்க படுகிறது. இந்த தொடரில் 3 விக்கெட் எடுத்திருக்கிறார் ஜடேஜா.

ரவிச்சந்திரன் அஸ்வின்

சாம்பியன்ஸ் டிராபி 2017: இந்தியா vs வங்கதேசம் - எதிர்பார்க்கும் இந்திய அணி 1

இலங்கை மற்றும் பாகிஸ்தான் போட்டிகளில் அஸ்வின் விளையாடாதது பலரை கேள்வி எழுப்ப செய்தது. ஆனால், தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியின் போது அணியில் இடம் பிடித்த அஸ்வின், முக்கியமான ஆம்லா விக்கெட் எடுத்து அசத்தினார். அதேபோல், அவருடைய ஆப்-ஸ்பின் -ஆல் வங்கதேசத்தை கண்கலங்க செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புவனேஸ்வர் குமார்

Cricket, Champions Trophy, India, Bangladesh, Predicted India XI

எதிரணியின் ரன்னை மட்டும் கட்டுப்படுத்தாமல் தேவை படும் நேரங்களில் முக்கியமான விக்கெட்டை எடுக்கும் வல்லமை வாய்ந்தவர் புவனேஸ்வர் குமார். இதே போல், வங்கதேசத்திற்கு எதிராக முக்கியமான விக்கெட்டுகளை இந்தியா வெற்றி பெற உதவுவார் என எதிர்பார்க்க படுகிறது.

ஜேஸ்ப்ரிட் பும்ரா

Cricket, Champions Trophy, India, Bangladesh, Predicted India XI

மற்றொரு இந்திய வேகப்பந்து பும்ரா சிறப்பாக பந்து வீசி இலங்கை அணிக்கு எதிராக ஆட்டநாயகன் விருது பெற்றார். தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக ரன் அதிகமாக கொடுக்காமல் கட்டுப்படுத்தினார். அதேபோல், வங்கதேசத்திற்கு எதிராக யார்கர் வீசி பயம் படுத்துவார் என எதிர்பார்க்க படுகிறது.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *