கேப் டவுனில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இந்நிலையில், வரும் சனிக்கிழமை செஞ்சுரியனில் 2-ஆவது டெஸ்டில் களம் காண்கிறது இந்தியா.
இதனிடையே, அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா வியாழக்கிழமை செய்தியாளர் சந்திப்பின்போது கூறியதாவது:

ஒரு தோல்விக்காக நம்பிக்கையை இழக்கக் கூடாது. அப்படி இழந்தால், டெஸ்ட் கிரிக்கெட் விளையாடத் தகுதியற்றவர்களாகிவிடுவோம். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும். தவறு செய்யாத வீரர் எவருமே கிடையாது.

Jasprit Bumra of India appeals for the wicket of Faf du Plessis(c) of South Africa during day one of the first Sunfoil Test match between South Africa and India held at the Newlands Cricket Ground in Cape Town, South Africa on the 5th January 2018 Photo by: Ron Gaunt / BCCI / SPORTZPICS

தென் ஆப்பிரிக்காவில் நான் இதுவரை விளையாடியதில்லை. எனவே, முதல் போட்டியில் கற்றுக் கொண்ட அனுபவத்தின் மூலமாக, 2-ஆவது போட்டியை எதிர்கொள்ள உள்ளேன். எனது முதல் விக்கெட்டாக டி வில்லியர்ஸை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது.

எனினும், ஒரு பந்துவீச்சாளராக ஒவ்வொரு போட்டிக்குப் பிறகு அதிகம் மகிழ்ச்சி அடையாமலும், அதிகம் துவண்டு விடாமலும் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு அடுத்த ஆட்டத்துக்கு தயாராக வேண்டும் என்பது எனது மந்திரம்.

அந்நிய மண்ணில் புதிதாக விளையாடும்போது சவாலாகவே இருக்கும். ஏனெனில் ஆடுகளமும், வானிலையும் வித்தியாசமாக இருக்கும்.

Dale Steyn of South Africa celebrates the the wicket of Shikhar Dhawan of India during day one of the first Sunfoil Test match between South Africa and India held at the Newlands Cricket Ground in Cape Town, South Africa on the 5th January 2018 Photo by: Ron Gaunt / BCCI / SPORTZPICS

அந்த வகையில் புதிய சவால்களை சந்திப்பது நல்லது. அதிகம் விளையாடும்போது, அதிகம் தெரிந்துகொள்ள இயலும். பின்னர் அந்த அனுபவத்தின் மூலம் தகுந்த முறையில் பந்துவீச இயலும்.
முதல் போட்டியை பொருத்த அளவில், முதல் இன்னிங்ஸில் பந்துவீச்சின்போது நாங்கள் செய்த தவறை உணர்ந்துகொண்டோம். அதை சரி செய்ததாலேயே 2-ஆவது இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்காவை கட்டுப்படுத்த முடிந்தது என்று பும்ரா கூறினார்.

  • SHARE

    Just a normal human being with some passion on Cricket. And am a Civil Engineer, YouTuber, Freelancer, Former Junior Engineer Govt.Of India, UPSC Aspirant.

    விவரம் காண

    தென்னாப்பிரிக்காவில் முடியவில்லை என்றால் ட்ராவிற்காக ஆடியிருக்க வேண்டும் : தோனி

    தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி என்ன செய்திருக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ்...

    சிஸ்கே தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் ப்ளெம்மிங் நியமனம்!!

    சிஸ்கே தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் ப்ளெம்மிங் நியமனம்!! சூதாட்ட புகார் எழுந்ததால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கடந்த இரண்டு...

    ஐ.பி.எல் ஏலத்தில் கோடிகளை குவிக்க காத்திருக்கும் தென் ஆப்ரிக்காவின் நிகிதி !!

    ஐ.பி.எல் ஏலத்தில் கோடிகளை குவிக்க காத்திருக்கும் தென் ஆப்ரிக்காவின் நிகிதி பெங்களூரில் வரும் 27 மற்றும் 28ம் தேதி நடைபெற உள்ள ஐ.பி.எல் வீரர்களுக்கான...

    இந்தியா-தென்னாப்பிரிக்கா 4வது ஒருநாள் போட்டி பிங்க் நிற போட்டியாக நடைபெறும்!!

    இந்திய அணி தென்னாப்பிரிக்கா சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த சுற்றுபயணத்த்தில் 3 டெஸ்ட் போட்டிகள், 6 ஒருநாள் போட்டிகள், மற்றும் 3...

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அஸ்வினைச் சேர்க்க முயற்சி செய்வோம் : தோனி

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அஸ்வினைச் சேர்க்க முயற்சி செய்வோம் என தோனி கூறியுள்ளார். சென்னையி இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தோனி கூறியதாவது: 2 வருடங்கள்...