டெல்லி அணிக்கு வெற்றியை தேடி தந்தார் கௌதம் கம்பிர் 1

டெல்லி அணிக்கு வெற்றியைத் தேடி தந்தார் கௌதம் கம்பிர்

இந்த வருட ரஞ்சி கோப்பை தொடர் கடந்த சில மாதங்களாக நடை பெற்று வருகிறது. லீக் சுற்றுப் போட்டிகள் முடிந்து மொத்தம்4 பிரிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் காலிறுதி சுற்றுக்குத் தயாராகின.

தற்போது டிசம்பர் 7ஆம் தேதி முதல் காலிறுதி சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இரண்டாவது காலிறுதிப் போட்டியில் டெல்லி மற்றும் மத்திய பிரதேச அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ரிஷப் பாண்ட் பந்து வீச தீர்மானித்தார்.

இதனால் முதலில் பேட்டிங் செய்த மத்திய பிரதேச அணி 124.1 ஓவரில் 338 ரன்னிற்கு ஆகி அவுட் ஆனது. மத்திய பிரதேர் அணி சார்பில் ஹர்பிரீட் சிங் 200 பந்துகளில் 107 ரன் குவித்தார். டெல்லி அணி சார்பில் மனன் சர்மா 46 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.டெல்லி அணிக்கு வெற்றியை தேடி தந்தார் கௌதம் கம்பிர் 2

பின்னர் ஆடிய டெல்லி அணி அற்புதமாக ஆடி, 405 ரன் குவித்தது. அதன் பிறகு லீட் வைக்கும் நோக்கத்துடன் தனது இரண்டாவது இன்னிங்சை ஆடிய மத்திய பிரதேச அணி 283 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதிலும் ஹர்பிரீட் சிங் 76 ரன்கள் குவித்தார் இதனால் போட்டி ஒரு முடிவை நோக்கி சென்றது.

டெல்லி அணிக்கு கடைசி ஒன்றரை நாளில் 217 ரன் இலக்கு வைத்தது மத்திய பிரதேச அணி. இப்படி இக்கட்டான சூழ்நிலையில் ஆடிய டெல்கி அணிக்கு சரியான நேரத்தில் கை கொடுத்தார் கௌதம் கம்பிர். 125 பந்துகளுக்கு 95 ரன் குவித்து டெல்லி அணிக்கு வெற்றி தேடித் தந்தார். ஆனால், அவரால் சதம் அடிக்க இயலவில்லை.டெல்லி அணிக்கு வெற்றியை தேடி தந்தார் கௌதம் கம்பிர் 3

இப்படி அடுத்தடுத்த இக்கட்டான போட்டிககளில் தனது ஆட்டத்தை காட்டி வருகிறார் கௌதம் கம்பிர். இந்த வருட ரஞ்சிக் கோப்பையில் மட்டும் கம்பிர், 9 ஆட்டத்தில் 505 ரன் குவித்துள்ளார்.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4-ஆவது காலிறுதியில் மும்பையை எதிர்கொண்ட கர்நாடகம் இன்னிங்ஸ் மற்றும் 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
நாகபுரியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை 56 ஓவர்களில் 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

டெல்லி அணிக்கு வெற்றியை தேடி தந்தார் கௌதம் கம்பிர் 4
Propelled by Shreyas Gopal’s unbeaten 150, Karnataka were on top at the end of Day 3 in Vidarbha against Mumbai. The Vinay Kumar-led team have further strengthened their stranglehold in the all-important game.

பின்னர் ஆடிய கர்நாடகம் தனது முதல் இன்னிங்ஸில் 163.3 ஓவர்களில் 570 ரன்கள் குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 370 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய மும்பை 114.5 ஓவர்களில் 377 ரன்களுக்கு ஆட்டமிழந்து, தோல்வி கண்டது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *