Ms Dhoni, Sanjiv Goenka, Steve Smith, Rising Pune Supergiant, IPL 2017, Cricket

இந்த 10வது இந்தியன் பிரீமியர் லீக் தொடங்குவதற்கு முன்பு ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங்க் தோனியை தூக்கி எறிந்தார் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா.

மகேந்திர சிங் தோனி, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த கேப்டனாக வளம் வந்தவர். அதுமட்டுமில்லாமல், ஐபில் தொடர்களிலும் சிறந்த கேப்டனாக இருந்துள்ளார். இதுவரை கேப்டனாக இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2 ஐபில் கோப்பைகள், 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள், ஆறு முறை ஐபில் பைனல் என பட்டையை கிளப்பியுள்ளார்.

ஆனால், கடந்த ஐபில் சீசனின் புள்ளிபட்டியலில் 7வது இடத்தில இருந்தது. இதனால், அந்த அணியின் உரிமையாளர் கோயங்கா, இந்த சீசனுக்கு ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டன் பொறுப்பில் உட்கார வைத்தார்.

இதனால், கோயங்கா மீது சர்ச்சைகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த சீசனில், ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் களமிறங்கிய புனே அணி முதல் முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. இதுவரை பார்த்த கேள்விகளே போதும் என பதிலளிக்க வந்தார் கோயங்கா.

“கேப்டனை மாற்றியது கடந்த காலம், அதை பற்றி இப்பொழுது பேசுவது பொருத்தமானது அல்ல. தோனி எங்கள் அணியில் ஒரு வீரராக இருக்கிறார், அதற்குண்டான மதிப்பை நாங்கள் கொடுக்கிறோம். அனைவரின் கையிலும் 5 வீரர்கள் தான் இருக்கிறது, ஆனால் மீதமுள்ளவர்களை தவிர்த்து ஒருவரை மட்டும் நான் எப்படி தேர்ந்தெடுப்பது?,” என சஞ்சீவ் கோயங்கா கூறினார்.

ஸ்டீவ் ஸ்மித்தின் கேப்டன்சி பற்றி கேட்ட போது,”அவரின் உத்திகள் சிறப்பாக இருக்கிறது. அவரது பீல்டிங் மாற்றங்கள், அவருடைய அறிவை காட்டுகிறது. வீரர்களை புரிந்து கொள்ள அவருக்கு சில போட்டிகள் தேவை பட்டது, ஆனால் இப்பொழுது அவர் பட்டையை கிளப்புகிறார். கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில் 8 போட்டிகள் வெற்றி பெற்றுள்ளோம்.,” என அவர் கூறினார்.

புனே மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகள் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபில் தொடரில் பங்கேற்காது என இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக கூறியது. ஆனால், அதை பற்றி எங்களுக்கு எந்த தகவலும் பிசிசிஐ தெரிவிக்கவில்லை என கூறினார்.

“இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. இந்த பயணம் எங்களுக்கு பிடித்திருக்கிறது, இதை அப்படியே தொடரவேண்டும் என விரும்புகிறேன்,” என கூறினார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *