தேநீர் இடைவேளை நிலைமை : தென்னாப்பிரிக்க அணி முன்னிலை 182/2 1

இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 மணிக்கு செஞ்சூரியனில் தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். கேப் டவுன் டெஸ்டில் காயம் அடைந்த டேல் ஸ்டெயினுக்குப் பதிலாக லுங்கி நிகிடி சேர்க்கப்பட்டுள்ளார். 21 வயதாகும் இவருக்கு இதுதான் அறிமுக டெஸ்ட் ஆகும்.

இந்திய அணியில் தவான், விக்கெட் கீப்பர் சகா, வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஆகியோர் நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல், பார்தீவ் பட்டேல், இசாந்த் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தென்ஆப்பிரிக்கா அணியின் டீன் எல்கர், மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டனர். லீவ் செய்யக்கூடிய பந்தை லீவ் செய்து. அடிக்கக்கூடிய பந்தை அடித்து விளையாடினார்கள். டீன் எல்கர் நிதானமாக விளையாட மார்கிராம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சொந்த மைதானத்தில் பந்து எப்படி வரும் என்பதை துள்ளியமாக அறிந்த வைத்திருக்கும் மார்கிராம் 81 பந்தில் 9 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இவரது ஆட்டத்தால் தென்ஆப்பிரிக்கா முதல் நாள் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் 27 ஓவரில் 78 ரன்கள் சேர்த்தது. டீன் எல்கர் 26 ரன்னுடனும், மார்கிராம் 51 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.தேநீர் இடைவேளை நிலைமை : தென்னாப்பிரிக்க அணி முன்னிலை 182/2 2

தேனீர் இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. தென்ஆப்பிரிக்கா 85 ரன்கள் எடுத்த நிலையில் முதல் விக்கெட்டை இழந்தது. டீன் எல்கர் 31 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து ஹசிம் அம்லா களம் இறங்கினார்.

இந்த போட்டியில் ஒப்பனர் எயிடன் மார்க்ரம் அற்புதமாக ஆபினார். 150 பந்துகளுக்கு 95 ரன் அடித்து தனது சதத்தை அஸ்வின் பந்தில் தவரவிட்டார். ரவுண்ட் த விக்கட்டில் வந்து வந்து வீசிய அஸ்வின் பந்தை தடுத்து ஆடினார். தடுத்து ஆடிய அந்த பந்து அவரது பேட்டில் சிறிது பட்டு சென்றது விக்கெட் கீப்பர் பர்த்திவ் படேல் கேட்ச் பிடித்து அவுட் ஆனார்.

இந்த விக்கெட்டை பார்த்த அவரது காதலி மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் சதம் அடிக்க முடியாமல் போனதே என வருத்தப்பட்டனர். இருந்தும் அவரது முயற்சியை வெகுமாக பாராட்டினர்.

தற்போது தேநீர் இடைவேளை வரை 56 ஓவர்களில் 182 ரன்னிற்கு 2 விக்கெட்டுகள் இழந்துள்ளது தென்னாப்பிரிக்க அணி. ஹாஷிம் அம்லா 35 ரன்னுடனும் டி வில்லியர்ஸ் 16 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

https://twitter.com/PRINCE3758458/status/952200812138131459

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *