இந்திய அணி இடதுகை வேக பந்து வீச்சாளரை தேடி வருகிறது ! அது உனக்கண்ட் தானா ? 1

தற்போது இந்திய அணியில் சாஹீர் கானுக்கு பிறகு எந்த ஒரு இடது கை வேக பந்து வீச்சாளரும் இல்லை, இதனால் தற்போது இந்திய அணிக்கு ஒரு இடதுகை வேக பந்து வீச்சாளரை தேடி வருகிறார்கள்.

இந்திய அணியில் நல்ல பார்மில் இருக்கும் ஒரே வேக பந்து வீச்சாளர் உனக்கண்ட் தான். இதனால் இந்த இடத்திற்கு இவர் வரலாம் என பேசி வருகிறார்கள். உனக்கண்ட் இந்த ஐபிஎல் போட்டிகளில் புனே அணியில் இடம் பிடித்து சிறப்பாக பந்து வீசி அதிக விக்கெட்களை கைப்பற்றினார்.

இதில் இவர் மூன்று பந்துகளில் தொடர்ந்து மூன்று விக்கெட்களை எடுத்து அசத்தினார். புனே அணியில் இடம் பிடித்த உனக்கண்ட் 12 போட்டிகளில் விளையாடி உள்ளார் இந்த 12 போட்டிகளில் உனக்கண்ட் 24 விக்கெட்களை எடுத்து அனைவர் இடமும் பாராட்டுகளை பெற்றார்.

பிறகு ஒரு போட்டியில் ஐந்து விக்கெட்களை எடுத்து அசத்தினார் இதனால் ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார்.

நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் இந்திய அணியின் வேக பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் தான் முதல் இடத்தை பிடித்தார் அவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தை இந்திய அணியின் இடது கை வேக பந்து வீச்சாளர் உனக்கண்ட் இரண்டாவது இடத்தை பிடித்தார். மற்ற ஐபிஎல் போட்டிகளை விட உனக்கண்ட் இந்த ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட் எடுத்து உள்ளார் என்பது குறிப்பிட்ட தக்கது.

இந்திய அணி இடதுகை வேக பந்து வீச்சாளரை தேடி வருகிறது ! அது உனக்கண்ட் தானா ? 2

தற்போது இந்தியா இலங்கை அணிகள் விளையாடி வருகிறது இதில் மூன்று டெஸ்ட் பொடிகள் கொண்ட தொடரை இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று இலங்கை அணியை படு தோல்வி அடைய செய்தது.

தற்போது இரண்டு அணிகளும் ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது இதில் இரண்டு போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று உள்ளது.

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *