தென்னாப்பிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, செஞ்சுரியனில் இன்று பிற்பகல் தொடங்குகிறது. இதற்காக இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்யப்பட இருக்கிறது.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பரிதாபமாக தோற்றது. வெற்றிபெற வேண்டிய வாய்ப்பை எளிதில் இந்திய அணி இழந்தது. இந்தப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் புவனேஷ்வர்குமார், பும்ரா, ஷமி சிறப்பாக செயல்பட்டனர். ஹர்திக் பாண்ட்யா ஆல்ரவுண்டராக ஜொலித்தார். இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி, செஞ்சுரியனில் இன்று நடக்கிறது.

வெளிநாட்டில் சிறப்பாக விளையாடும் ரஹானே முதல் டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்படாதது கடும் விமர்சனத்துக்குள்ளானது. இன்றைய போட்டியில் அவர் சேர்க்கப்படுவார் என்று கூறப்படுகிறது. தொடக்க ஆட்டக்காரராக தவானுக்குப் பதில் கே.எல்.ராகுல் களமிறங்குகிறார். வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவும் களமிறக்கப்படுகிறார். விக்கெட் கீப்பர் சஹா காயம் அடைந்துள்ளதாகவும் அவருக்குப் பதில் பார்த்திவ் படேல் இன்றைய போட்டியில் சேர்க்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. முதல் போட்டியில் கண்ட தோல்வி காரணமாக, இந்த மாற்றங்களை இந்திய அணி செய்துள்ளது.

முதல் போட்டியில் கண்ட தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இந்தப் போட்டியில் இந்திய அணி, சிறப்பாக விளையாடும் என்று தெரிகிறது.

இந்தப் போட்டி பற்றி இந்திய கேப்டன் விராத் கோலி கூறும்போது, செஞ்சுரியன் பிட்ச் உயிரோட்டமாக இருக்கிறது. இது போன்ற பிட்சைதான் எதிர்பார்த்தோம். இது வேகப்பந்துவீச்சுக்கு சிறப்பாக இருக்கும் என்று கருதுகிறோம். Rohit Sharma, KL Rahul, Cricket, India, Sri Lanka,இன்றைய போட்டியில் சுழல் பந்துவீச்சாளரை உட்கார வைத்துவிட்டு, அவருக்குப் பதில் வேறு ஒரு பேட்ஸ்மேனை சேர்ப்பது பற்றி கேட்கிறார்கள். அதற்கும் வாய்ப்பிருக்கிறது. எதையும் கடைசி நேரத்தில்தான் முடிவு செய்வோம். ரஹானேவை சேர்க்காதது பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன். ரஹானே, தென்னாப்பிரிக்காவில் சிறப்பாக விளையாடி இருக்கிறார் என்பதும் அவர் சிறந்த வீரர் என்பது தெரியும். எங்கள் டீமில், வெளிநாடுகளில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர் அவர்தான். அதனால் அவரை நாங்கள் அறிவோம்.

இருந்தாலும் இப்போது ஃபார்மில் யார் இருக்கிறார்களோ, அவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே ரோகித் சர்மா சேர்க்கப்பட்டார். முதல் போட்டியில் தோல்வி அடைந்துவிட்டதால் பீதி அடைய வேண்டியதில்லை. வீரர்கள் தங்கள் திறமையை இந்தப் போட்டியில் சிறப்பாக வெளிப்படுத்துவார்கள்’ என்றார்.

 • SHARE

  Just a normal human being with some passion on Cricket. And am a Civil Engineer, YouTuber, Freelancer, Former Junior Engineer Govt.Of India, UPSC Aspirant.

  விவரம் காண

  பச்சைபசேல் என இருக்கும் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான ஆடுகளம் : தாக்கு பிடிக்குமா இந்தியா

  இந்திய அணி வீரர்கள் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கும் ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டனர். இந்த ஆடுகளம் வேகேபந்து வீச்சிற்கு சாதகமான...

  கோஹ்லியை விட இவர் தான் சிறந்த வீரர்…முன்னாள் வீரர் சொல்கிறார்

  கோஹ்லியை விட இவர் தான் சிறந்த வீரர்…முன்னாள் வீரர் சொல்கிறார் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லியை விட...

  நான் கில்லாடியான ரகசியம் இது தான்… உண்மையை உடைத்த தல தோனி !!

  நான் கில்லாடியான ரகசியம் இது தான்… உண்மையை உடைத்த தல தோனி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தலைசிறந்த விக்கெட் கீப்பராக தான் மாறியது எப்படி...

  சையத் முஸ்தாக் அலி டிராபி… மும்பை அணிக்காக களமிறங்குகிறார் திரிவேதி !!

  சையத் முஸ்தாக் அலி டிராபி… மும்பை அணிக்காக களமிறங்குகிறார் திரிவேதி தென் ஆப்ரிக்காவில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களின் வலை பயிற்சியில் பந்து வீசுவதற்காக,...

  அமைச்சரவையில் மோடி பக்தர்களை விட பிசிசிஐ-யில் கோலி பக்தர்கள் அதிகம்: கேப்டனின் அதிகாரம் குறித்து ராமச்சந்திர குஹா

  பயிற்சியாளர் தேர்வு முதல் அணித்தேர்வு, போட்டிகளில் ஆடும் 11 வீரர்கள் தேர்வு மட்டுமல்லாமல் பல் வேறு விதங்களிலும் இந்திய கேப்டன் விராட் கோலி...