காயம் காரணமாக தென்னாப்பிரிக்க தொடருக்கு சந்தேகம் 1

தனது விடா முயற்சியில் பல வருடங்களுக்ப் பிறகு இந்தியாவின் டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளவர் பர்த்திவ் படேல். தென்னாப்பிரிக்க தொடருக்காக இந்திய அணிக்கு பேக்-அப்.விக்கெட் கீப்பராக தேர்வு செய்யாப்பட்டுள்ளார்.காயம் காரணமாக தென்னாப்பிரிக்க தொடருக்கு சந்தேகம் 2

ரஞ்சி டிராபி காலிறுதியில் பார்தீவ் பட்டேலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரஞ்சி டிராபி காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் காலிறுதி ஒன்றில் குஜராத் – பெங்கால் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டி கடந்த 10-ந்தேதி தொடங்கியது.காயம் காரணமாக தென்னாப்பிரிக்க தொடருக்கு சந்தேகம் 3

முதல்நாளில் பெங்கால் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது குஜராத் அணி கேப்டனும், விக்கெட் கீப்பரும் ஆன பார்தீவ் பட்டேல் விக்கெட் கீப்பர் பணியை செய்துகொண்டிருந்தார். அப்போது அவரது கையில் உள்ள நடுவிரலில் காயம் ஏற்பட்டது. காயம் பலமாக இருந்ததால் முதல் உணவு இடைவேளையில் இருந்து தற்போது வரை அவர் மீண்டும் களத்திற்கு திரும்பவில்லை.

அடுத்த மாதம் தொடக்கத்தில் இந்திய அணி தென்ஆப்பிரிக்கா செல்கிறது. சகா முதன்மை விக்கெட் கீப்பராக செயல்படுகிறார். மாற்று விக்கெட் கீப்பராக பார்தீவ் பட்டேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள காயத்தால் பார்தீவ் பட்டேல் தென்ஆப்பிரிக்கா தொடரில் பங்கேற்பதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.காயம் காரணமாக தென்னாப்பிரிக்க தொடருக்கு சந்தேகம் 4

அவரது காயம் குறித்து குஜராத் பேட்ஸ்மேன் மன்ப்ரீத் ஜூனேஜா கூறுகையில் ‘‘அவரது கை விரலில் இரண்டு மூன்று முறை ஒரே இடத்தில் பந்து தாக்கியது. அது மிகவும் மோசமான தாக்குதல். அவரது காயம் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து உறுதியான தகவல் தெரியவில்லை’’ என்றார்.

ஆனால் பயிற்சியாளர் விஜய் பட்டேல், ‘‘பார்தீவ் பட்டேலுக்கு லேசான காயம்தான். அவர் தென்ஆப்பிரிக்கா தொடரில் பங்குபெறுவார்’’ என்றார்.

காயம் காரணமாக தென்னாப்பிரிக்க தொடருக்கு சந்தேகம் 5
Mohali: Indian cricketer Parthiv Patel during a practice session ahead of the 3rd test match against England in Mohali on Thursday. PTI Photo by Vijay Verma (PTI11_24_2016_000206A)

டிசம்பர் மாதம் 28ஆம் தேதி தென்னாபிரிக்கவிற்கு பயணம் செய்யவுள்ள இந்திய அணி டிசம்பர் 30 மற்றும் 31ஆம் தேதிகளில்  ஒரு பயிற்சி ஆட்டத்தில் ஆடவுள்ளது. பின்னர் தென்னாப்பிரிக்கவிற்கு எதிராக 6 ஒருநாள் போட்டிகள், 3 டெஸ்ட் மற்றூம் 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்தியா – தென்னாப்பிரிக்கா தொடர் அட்டவணை

பயிற்சி ஆட்டம் – டிச.30&31, பார்ல் மைதானம், மதியம் 1.30

டெஸ்ட் தொடர்

  1. முதல் டெஸ்ட் போட்டி – ஜனவரி.5, கேப்டவுன், மதியம் 1.30 மணிக்கு
  2. இரண்டாவது டெஸ்ட் போட்டி – ஜனவரி.13, செஞ்சூரியன்,மதியம் 2.00
  3. மூன்றாவது டெஸ்ட் போட்டி – ஜனவரி.24, ஜோகனஸ்பெர்க், மதியம் 1.30

ஒருநாள் தொடர்

  1. முதல் ஒருநாள் போட்டி – பிப்.01, டர்பன், மாலை 5.00 மணிக்கு
  2. இரண்டாவது ஒருநாள் போட்டி – பிப்.04,செஞ்சூரியன் மதியம் 1.30
  3. மூன்றாவது ஒருநாள் போட்டி – பிப்.07, கேப் டவுன், மாலை 5.00 மணிக்கு
  4. நாளாவது ஒருநாள் போட்டி – பிப்.10, ஜோகனஸ்பெர்க், மாலை 5.00
  5. ஐந்தாவது ஒருநாள் போட்டி – பிப்.13, போர்ட் எலிசபெத், மாலை 5.00
  6. ஆறாவது ஒருநாள் போட்டி – பிப்.16, செஞ்சூரியன், ம்ச்ஸ்ல்சி 5.00

டி20 தொடர்

  1. முதல் டி20 போட்டி – பிப்.18, ஜோகனஸ்பெர்க், மாலை 6.00
  2. இரண்டாவது டி20 போட்டி – பிப்.21, செஞஜூரியன், இரவு 9.30
  3. மூன்றாவது டி20 போட்டி – பிப்.24, கேப் டவுன், கேப் டவுன், இரவு 9.30

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *