காம்பீர கழட்டி விட்ருவாங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியும்; சேவாக் சொல்கிறார் !! 1
காம்பீர கழட்டி விட்ருவாங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியும்; சேவாக் சொல்கிறார்

ஐ.பி.எல் தொடரின் கொல்கத்தா அணியில் இருந்து அந்த அணியின் கேப்டன் கவுதம் காம்பீர் கழட்டி விடப்பட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆண்டுதோறும் மிகப்பிரமாண்டமாக நடைபெறும் ஐ.பி.எல் டி.20 தொடர் வரும் ஏப்ரல் மாத இறுதியில் துவங்க உள்ளது.

காம்பீர கழட்டி விட்ருவாங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியும்; சேவாக் சொல்கிறார் !! 2

சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐ.பி.எல் டி.20 தொடரில் இருந்து இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த வருடம் மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறது.

இதில் குறிப்பாக தமிழகத்தின் செல்ல பிள்ளையான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரீ எண்ட்ரீ கொடுக்க இருப்பதால் மற்ற ஐ.பி.எல் தொடர்களை விட இந்த தொடருக்கு ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இதற்காக ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்து கொண்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி, ரெய்னா மற்றும் ஜடேஜாவை தக்க வைத்து கொண்டது.

காம்பீர கழட்டி விட்ருவாங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியும்; சேவாக் சொல்கிறார் !! 3

இதே போல் நடிகர் ஷாரூக் கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, கொல்கத்தாவிற்கு இரண்டு முறை கோப்பையை வென்று கொடுத்த, கேப்டன் கவுதம் காம்பீரை கழட்டிவிட்டு, விண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் ஆண்ட்ரியூ ரசல் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் ஆகியோரை தனது அணியில் தக்க வைத்து கொண்டது.

கடந்த சில தினங்களுக்கு கவுதம் காம்பீர், தான் டெல்லி அணிக்காக விளையாடவே விரும்புவதாக தெரிவித்திருந்தாலும் கொல்கத்தா அணியில் இருந்து காம்பீர் கழட்டி விடப்பட்டிருப்பது, கொல்கத்தா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காம்பீர கழட்டி விட்ருவாங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியும்; சேவாக் சொல்கிறார் !! 4

இந்நிலையில் காம்பீரை கொல்கத்தா அணி தக்க வைத்து கொள்ளாததில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும்,  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆலோசகருமான  விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய சேவாக், “காம்பீரை கொல்கத்தா அணி தக்க வைத்து கொள்ளாததில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை, அதே வேளையில் RTM கார்டு முறையில் மீண்டும் காம்பீரை கொல்கத்தா அணி தனது அணியில் இணைத்து கொள்ளவும் வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

காம்பீர கழட்டி விட்ருவாங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியும்; சேவாக் சொல்கிறார் !! 5

மேலும் பெங்களூர் அணியில் இருந்து கிறிஸ் கெய்ல் மற்றும் சாஹல் உள்ளிட்ட சிறந்த வீரர்கள் கழட்டிவிடப்பட்டது  முட்டாள்  தனமான செயல் என்றும் சேவாக் தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *