வீடியோ : அஷ்வின் பந்தில் குபீர் காட்டிய மலிண்டா புஷ்ப குமாரா 1
(Photo Source: AFP)

” இந்த ஆளுக்கு நான் என்னத்தச் சொல்ல ” எனக்கூறி சிரித்து கொண்டு மலிண்டா புஷ்ப குமாரவை கலாய்த்து தள்ளி இலங்கை வர்ணனையாளர் ரசல் அர்னால்டு முரளி கார்த்திக் உடன் வர்ணனை  செய்து கொண்டிருந்தார்

வீடியோ : அஷ்வின் பந்தில் குபீர் காட்டிய மலிண்டா புஷ்ப குமாரா 2

இந்தியா இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இலங்கையில் உள்ள கொலும்பு மைதானத்தில் நடந்தது.நான்காவது நாளான இன்றுடன் இந்த போட்டி முடிவை எட்டியது.நேற்றைய ஆட்டதில் மிகவும் அருமையாக ஆடிய இலங்கை அணி வீரர்கள்  நேற்றைய ஆட்ட நேர முடிவில் 209 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற வலுவான நிலையில் இருந்தது.

பின்னர் நான்கவது நாளான இன்று திமுத் கருனா ரத்னாவும் மலிண்டா  புஷ்ப குமாரவும் இன்றைய நாள் ஆட்டத்தை மிகவும் கவனமாக தொடங்கினர் .நேற்றைய நாள் ஆட்டதில் 5 ஒவெர்கள் மீதம் இருக்கும்  நிலையில் அதிரடியாக ஆடிவந்த குஷல் மெண்டிஷ் ஆட்டம் இழந்தார் .

5 ஒவெர்கள் மீதம் இருந்த நிலையில் அடுத்த விக்கெட் விழாமல் பாதுகாக்க இரவுக் காவலனாக (நைட் வாட்ச்மேன்) மலிண்டா புஷ்ப குமாரவை அனுப்பி வைத்தார் கேப்டன் தினேஷ் சண்டிமால் .

வீடியோ : அஷ்வின் பந்தில் குபீர் காட்டிய மலிண்டா புஷ்ப குமாரா 3

இன்றைய நாள் ஆட்டத்தை முதல் 45 நிமிடங்கள் மிக கவனமாக ஆடி வந்த மலிண்டா புஷ்ப குமார அஷ்வின் வீசிய 72 வது ஒவெரின் இரண்டவது பந்தை தனது கை மாற்றி இடது கை பேட்ஸ்மேன் போல ஆட நினைத்த அவர் தேவை இல்லாமல் முறை இல்லாத ட்ரைவ் ஆடினார்.அந்த பந்து நேராக அவரது ஸ்டெம்பை பதம் பார்த்தது

https://twitter.com/Cricvids1/status/894066111599083520

இந்த ஸார்ட் பார்பதற்க்கு  முறை இல்லாமல் எதோ பேட்டிங் தெரியதவர் ஆடியது போல் இருந்தது .இதை பார்த்த வர்ணனையாளர் ரசல் அர்னால்டு “இவருக்கு நான் என்ன சொல்லி புரிய வைக்க ” அஷ்வின் பந்தில் இடது கையில் திரும்பி ட்ரைவ் ஆட முற்படுவது எவ்வளவு முட்டால்  தனமானது என இந்திய வர்ணனையாளர்  முரளி கார்த்திக் உடன் சொல்லி சிரித்து கொண்டிருன்ந்தார் .

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் 2-வது இன்னிங்ஸில் ஜடேஜாவின் அபார பந்து வீச்சால் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

வீடியோ : அஷ்வின் பந்தில் குபீர் காட்டிய மலிண்டா புஷ்ப குமாரா 4

4-வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இலங்கை அணி ஜடேஜாவின் சுழல் வலையில் சிக்கியது. 3-வது நாளில் நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய புஷ்பகுமாரா 16 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் சண்டிமால் 2 ரன்கள் மட்டும் எடுத்து ஜடேஜா சுழலில் சிக்கினார். மறுமுனையில் நிதானமாக ஆடிய கருணாரத்னே தனது 6-வது சதத்தை அடித்தார். பின்பு அவருடன் மேத்யூஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் கருணாரத்னே ஜடேஜா பந்தில் ரஹானேவிடம் கேட்ச் ஆனார்.

அவரைத் தொடர்ந்து மேத்யூஸ் 36 ரன்கள், பெரேரா 4 ரன்கள், டி சில்வா 17 ரன்கள் என அடுத்தடுத்து ஜடேஜா வலையில் வீழ்ந்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 9-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

வீடியோ : அஷ்வின் பந்தில் குபீர் காட்டிய மலிண்டா புஷ்ப குமாரா 5

சற்று தாக்குபிடித்து விளையாடிய டிக்வெலா-ஹெராத் ஜோடியை ஹார்திக் பாண்டியா பிரித்தார். டிக்வெலா 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடரந்து பிரதீப்பும் அஸ்வின் பந்தில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் 70 ரன்கள் குவித்து, இரண்டாம் இன்னிங்ஸ் பந்து வீச்சில் 5 விக்கெட் என மொத்தம் இந்த போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப்போட்டியில் வென்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *