ரகானே ஏன் இந்த போட்டியில் ஆடவில்லை, கேப்டன் ரோகித் விளக்கம். 1
Rahane has ample experience of handling tricky situations and seems the ideal fit at the crucial spot, especially because the other candidates for the same, over the last year and a half, have been largely dismal.

இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி எளிதாக வெற்றி பெற்றது.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி தர்மசாலாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 29 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மகேந்திர சிங் தோனி மட்டும் தனி ஆளாக நின்று போராடினார்.

ரகானே ஏன் இந்த போட்டியில் ஆடவில்லை, கேப்டன் ரோகித் விளக்கம். 2
MS Dhoni of India bats during the first One Day International ( ODI ) between India and Sri Lanka held at the Himachal Pradesh Cricket Association Stadium, Dharamsala on the 10th December 2017 Photo by Deepak Malik / BCCI / Sportzpics

இருப்பினும், இந்திய அணி 112 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தோனி 65 ரன்கள் குவித்து இறுதியில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து 113 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 19 ரன் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் தரங்கா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். 46 பந்துகளில் 49 ரன்கள் எடுத்த தரங்கா பாண்ட்யா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, மேத்யூஸ் நிதானமாக விளையாட விக்கெட் கீப்பர் டிக்வில்லா அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தார். இதனால் இலங்கை அணி 20.4 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்து எளிதில் வெற்றி பெற்றது. மேத்யூஸ் (25), டிக்வெல்லா (26) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.ரகானே ஏன் இந்த போட்டியில் ஆடவில்லை, கேப்டன் ரோகித் விளக்கம். 3

டெஸ்ட் போட்டிகளில் நெ.4ல் சற்று பார்ம் இல்லாதது போல இருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் கடைசியாக ஆஸ்திரேலியா அணியுடன் ஆடிய தொடரில் அடுத்தடுத்து 4 அரை சதங்கள் அடித்து தனது பார்மை நிரூபித்தார் அஜிங்கியா ரகானே.

இருந்தும் இன்று நடந்த (டிச.10) இலங்கை அணியுடனான ஒருநாள் போட்டியில் ரகானே களம் இறக்கப்படவில்லை. ரோகித் சர்மா அணியின் தற்காலிக கேப்டனாக இருக்கிறார். ரகானேவிற்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு அறிமுக போட்டியில் ஆட வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

இது குறித்து போட்டிக்குப் பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது,

ரகானேவை ஒரு ஸ்பெஷல் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக நினைக்கிறது அணி நிர்வாகம். அவர், கடந்த இலங்கை தொடரில் ஒப்பனராக ஆடினார். அதனை அப்படியே பிக்ஸ் செய்துள்ளது அணி நிர்வாகம்.ரகானே ஏன் இந்த போட்டியில் ஆடவில்லை, கேப்டன் ரோகித் விளக்கம். 4

அதன் பின்னர் ஆஸ்திரேலியா அணியுடன் நன்றாக ஆடினார். ஆனால், அவருடைய இடத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருந்தால் அது அவரை மட்டும் பாதிக்காது அணியில் உள்ள மற்ற வீரர்களையும் பாதிக்கும்.

மேலும் அடுத்து வெளிநாடுகளுக்கு பயணம் செய்து ஆடுவதற்குல் மணீஷ், கேடர், ஷ்ரேயாஸ் ஆகியோருக்கு வாய்ப்புகள் கொடுத்து வீரரை தேர்வு செய்ய வேண்டும்.

ரகானே ஏன் இந்த போட்டியில் ஆடவில்லை, கேப்டன் ரோகித் விளக்கம். 5
Shreyas Iyer of India with ODI cap during the first One Day International ( ODI ) between India and Sri Lanka held at the Himachal Pradesh Cricket Association Stadium, Dharamsala on the 10th December 2017 Photo by Deepak Malik / BCCI / Sportzpics

இந்த தோல்வி குறித்து இந்தியக் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது,

இன்று நாங்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. இன்னும் இரண்டு போட்டிகள் இருக்கிறது. இன்று தேவையானதை நாங்கள் செய்யவில்லை. 70 முதல் 80 ரன்கள் குறைய்வாக அடித்திருந்தோம். இதனால் போட்டி எங்கள் கைக்கு வரவே இல்லை.

இது போன்ற சூழ்நிலை கொண்ட ஆடுகளத்தில் ஆட அணி எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.எப்போதும் மந்தமான ஆடுகளம் கிடைக்காது. இன்று கிடைத்த அடி அதற்கான ஆடுகளத்தில் கொண்ட பயிற்சி ஆகும்.ரகானே ஏன் இந்த போட்டியில் ஆடவில்லை, கேப்டன் ரோகித் விளக்கம். 6

தோனிக்கு தெரியும், இது போன்ற சூழ்நிலையில் எப்படி ஆட வேண்டும் என அவருக்கு நன்றாக தெரியும். அவருக்கு அவ்வளவு அனுபவம் இருக்கிறது. அவருடைய ஆட்டம் ஒன்றும் புதிதல்ல, அது எனக்கு ஆச்சரியமாக ஒன்றும் இல்லை.

தோனியின் இன்னொருவர் நின்று ஆடியிருந்தால் ஆட்டம் வேறு மாதிரியாக மாறி இருக்கும். இந்தியாவிற்கு கேப்டனாக முதல் போட்டியில் தோற்பது ஒரு நல்ல அனுபவம் இல்லை. தோற்க யாரும் விரும்ப மாட்டார்கள். அடுத்த இரண்டு போட்டிகளில் மிகக் கடுமையாக ஆட வேண்டும்.

எனக் கூறினார் கேப்டன் ரோகித் சர்மா.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *