ரோகித் அடித்து ஆடியிருந்தால் இன்னும் நன்றாக ஆடியிருப்பார் : டீன் ஜோன்ஸ் 1

தென் ஆப்பிரிக்காவில் இந்திய அணி அடைந்த தோல்விகளுக்குக் காரணம் பயிற்சி ஆட்டமே இல்லாமல் தொடரை விளையாடியதுதான் என்று பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், தயாரிப்பு என்பது தனிப்பட்ட வீரர்களின் ஆர்வம் மற்றும் பொறுப்பு என்பதற்கு லஷ்மண் கூறியதை மேற்கோள் காட்டுகிறார் முன்னாள் ஆஸி.வீரர் டீன் ஜோன்ஸ்.

ரோகித் அடித்து ஆடியிருந்தால் இன்னும் நன்றாக ஆடியிருப்பார் : டீன் ஜோன்ஸ் 2

ரோஹித் சர்மா பிரச்சினை பற்றி டீன் ஜோன்ஸ் கூறும்போது, “ஒருவரது பேட்டிங்கில் தவறு ஏற்படுவது எதில் எனில் அவர்களது தடுப்பாட்டத்தில்தான். ரோஹித் சர்மாவுக்கு பின்னடைவு ஏற்படுத்துவது அவரது தடுப்பாட்ட குறைபாடுகள்தான். ரோகித் அடித்து ஆடியிருந்தால் இன்னும் நன்றாக ஆடியிருப்பார்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 70% தடுப்பாட்ட உத்திகளே கைகொடுக்கும், ஒருநாள் போட்டிகளில் 40% தடுப்பாட்டம் கைகொடுக்கும். சுனில் கவாஸ்கர், ராகுல் திராவிட், சச்சின் டெண்டுல்கர், ஏன் விராட் கோலி போல் அவர் தடுப்பாட்டத்தை திறம்பட ஆடுவதில் பெருமை கொள்ள வேண்டும்.ரோகித் அடித்து ஆடியிருந்தால் இன்னும் நன்றாக ஆடியிருப்பார் : டீன் ஜோன்ஸ் 3

அணித்தேர்வை ஒழுங்கமைக்க தென் ஆப்பிரிக்கா போன்ற கடினமான தொடர்கள் இந்திய அணிக்குத் தேவை. ரோஹித் சர்மாவின் ஒருநாள் பார்மை ‘நடப்பு பார்ம்’ என்று நம்பி தேர்வு செய்வதால், அவர் எந்த அளவுக்குத் தேறுவார் என்பது இத்தகைய தொடர்கள் மூலம்தான் தெரியவரும்.

அடுத்த தொடரில் ரவி சாஸ்திரி, கோலி இருவருமே ரோஹித்திடம் உனக்கு போதிய வாய்ப்புகள் அளித்து விட்டோம் என்று கூறுவிட வாய்ப்புள்ளது.

நவீன கிரிக்கெட் போட்டி அட்டவணையில் பயிற்சி ஆட்டங்களுக்கு இடமில்லை. ஆனால் எதற்கு அதையே நம்பியிருக்க வேண்டும். விவிஎஸ் லஷ்மண் உள்ளிட்டோரிடம் பேசிய போது ஒன்று தெரியவந்தது. லஷ்மண், திராவிட், சச்சின் போன்றோர் ஆஸ்திரேலியா பயணத்துக்கு 3 மாதங்கள் முன்பே தயாரிப்பில் ஈடுபடுவார்களாம். அந்தப் பிட்சில் பந்துகள் எகிறுவதை எதிர்கொள்ளும் முறை போன்றவைகளை முன் கூட்டியே பயிற்சி செய்வார்கள்.ரோகித் அடித்து ஆடியிருந்தால் இன்னும் நன்றாக ஆடியிருப்பார் : டீன் ஜோன்ஸ் 4

பயிற்சி ஆட்டம் இல்லாமல் முதல் டெஸ்ட்டை ஆடி அதில் தோற்றால் அதன் பிறகு தொடரில் மீண்டு வருவது எப்போதும் கடினம். எப்படியும் வெளிநாடுகளில் அணிகள் அதிகம் வெல்வதில்லை. நான் இதில் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன், கடந்த 10-15 ஆண்டுகளில் வெளிநாடுகளில் சிறப்பாக ஆடி வெற்றி பெறும் ஒரே அணி தென் ஆப்பிரிக்காதான். தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறக் கடினமான ஒரு இடம், ஆஸ்திரேலியா கடந்த 2 தொடர்களில் இங்கு வென்றது.ரோகித் அடித்து ஆடியிருந்தால் இன்னும் நன்றாக ஆடியிருப்பார் : டீன் ஜோன்ஸ் 5

இதைக் கூறும்போது ஆஸ்திரேலிய பிட்ச்கள் மட்டைச் சாதக பிட்ச்கள் ஆகிவிட்டதால், இங்கிலாந்துதான் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கப் போகிறது. கோலிதான் ரன்கள் அடிக்கிறார், மற்றவர்களும் அவருடன் இணைய வேண்டும். அடுத்த 2-3 ஆண்டுகளில் இந்திய அணி இந்தச் சிறப்பானப் பந்து வீச்சை எவ்வாறு பயன்படுத்தி நன்றாக ஆடப்போகிறது என்பதைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன்” இவ்வாறு கூறினார் டீன் ஜோன்ஸ்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *