Cricket, Ms Dhoni, Rising Pune Supergiant, Twitter, Cricket, IPL 2017

இந்த ஐபில்-இல் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்காக எம்.ஸ். தோனி கேப்டனாக விளையாடவில்லை என்றாலும், பீல்டர்களை சரிசெய்வது, பந்து வீச்சாளர்களிடம் மற்றும் அந்த அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு டிப்ஸ் கொடுத்து வருகிறார்.

கடந்த ஐபில்-இல் தோனி தலைமையிலான புனே அணி மோசமாக விளையாடி 4 வெற்றிகள் மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் 7வது இடத்தில இருந்தது. இதனால், இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பு தோனியை கேப்டன் பொறுப்பில் இருந்து தூக்கி இருந்து ஸ்மித்தை கேப்டன் ஆகியது புனே அணி.

இந்தியாவிற்கு மட்டும் இல்லாமல் ஐபில் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கேப்டனாக சிறப்பாக செயல் பட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2 ஐபில் கோப்பைகள் மற்றும் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகள் வென்று சிறந்த கேப்டனாக வளம் வந்தார். ஆனால், புனேவின் நிலைமையை மாற்ற ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டன் பதவியில் உட்காரவைத்து புனே அணி.

இன்று நடக்கும் இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் தகுதிச்சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 26-பந்துகளில் 40 ரன், அத்துடன் 5 இமாலய சிக்ஸர் விளாசி ரசிகர்களுக்கு விருந்து வைத்தார்.

புனே அணிக்கு தோனி கேப்டனாக இல்லை என்றாலும், அந்த அணியில் இருக்கும் பிரபலமான வீரர் அவர்தான். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தோனியின் அணி என குறிப்பிட்டது ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட். இங்கே பாருங்கள்:

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *