அடுத்த போட்டிக்கு பிட்ச் இப்படி தான் இருக்கும்; ஆடுகளை பரமரிப்பாளர் கூறுகிறார் !! 1
அடுத்த போட்டிக்கு பிட்ச் இப்படி தான் இருக்கும்; ஆடுகளை பரமரிப்பாளர் கூறுகிறார்

இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் செஞ்சூரியன் ஆடுகளம் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து மைதான பரமாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரில், தென் ஆர்பிக்காவின் கேப்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வெறும் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்திய அணி, தனது மோசமான பேட்டிங் மூலம் 135 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 72 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

அடுத்த போட்டிக்கு பிட்ச் இப்படி தான் இருக்கும்; ஆடுகளை பரமரிப்பாளர் கூறுகிறார் !! 2

இந்த போட்டியின் மூன்றாம் நாளில் மழை குறிக்கிட்டதால் ஒரு பந்து கூட போடாமல், போட்டி மூன்றாம் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்ட்து, இதனை தொடர்ந்து நாளாம் நாள் ஆட்டத்தில் இரு அணிகளின் மொத்த விக்கெட்டும் ஒரே நாளில்  காலியானது. இந்திய அணி சார்பில் 10 விக்கெட்டும், தென் ஆப்ரிக்கா சார்பில் 8 விக்கெட்டும் அன்றைய ஒரே தினத்தில் இழந்தது. ஆடுகளத்தின் தன்மை மாறியது தான் கேப்டவுனின் விக்கெட் வேட்டை நடைபெற காரணமாக அமைந்தது.

இந்நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறும் செஞ்சூசியன் ஆடுகளம் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆடுகள பராமரிப்பாளர் பிரயான் ப்ளாய்  தெரிவித்துள்ளார்.

அடுத்த போட்டிக்கு பிட்ச் இப்படி தான் இருக்கும்; ஆடுகளை பரமரிப்பாளர் கூறுகிறார் !! 3

இது குறித்து ப்ளாய் கூறியதாவது., செஞ்சூரியன் ஆடுகளம் நிச்சயமாக GreenTop ஆக இருக்காதும். நாங்கள் எங்களால் முடிந்தவரை ஆடுகளத்தை சிறப்பாக வடிவமைத்துள்ளோம். முதல் போட்டியை போன்றே இரண்டாவது போட்டி ஆடுகளமும் விக்கெட் வேட்டை நடைபெற உறுதுனையாகவே இருக்கும்.

அடுத்த போட்டிக்கு பிட்ச் இப்படி தான் இருக்கும்; ஆடுகளை பரமரிப்பாளர் கூறுகிறார் !! 4

போட்டி நடைபெறும் செஞ்சூரியனில் மழை வருவதற்கான வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளதால், இந்தியா தென் ஆப்ரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நிச்சயம் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *