Cricket, Ajinkya Rahane, KL Rahul, Manish Pandey, Kedar Jadhav, Kuldeep Yadav, India, Sri Lanka

தற்போது இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதி வருகிறது இதில் இந்திய அணி டெஸ்ட் போட்டியில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் இலங்கை அணியை படு தோல்வி அடைய செய்தது அதனை தொடர்ந்து தற்போது இரு அணிகளும் ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது.

இதில் நடந்த மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை வென்று உள்ளது.

தற்போது செய்தியாளர்களிடம் பேட்டியளித்த விராட் கோஹ்லி இனி வரும் போட்டிகளில் இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என கூறியுள்ளார்.

இதனால் இந்திய அணியின் மற்ற வீரர்களுக்கும் அணியில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

இலங்கைக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா.

இதன்மூலம் 3-ஆவது வெற்றியைப் பெற்றிருக்கும் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியுள்ளது.

இலங்கையின் பல்லகெலேவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது.

இந்தியா இலங்கை 2017 : இனி வரும் போட்டிகளில் இந்திய அணியில் மாற்றம் இருக்கும் : விராட் கோஹ்லி 1

அந்த அணியில் லஹிரு திரிமானி அதிகபட்சமாக 105 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் எடுத்தார். சன்டிமல் 36, சிறிவர்த்தனா 29, கேப்டன் கபுகேதரா 14, டிக்வெல்லா 13, மேத்யூஸ் 11 ரன்கள் எடுக்க, எஞ்சிய வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இந்தியத் தரப்பில் பூம்ரா 5 விக்கெட்டுளை வீழ்த்தினார்.

 

பின்னர் ஆடிய இந்திய அணியில் தொடக்க வீரர் ரோஹித் சர்மா அசத்தலாக ஆட, மறுமுனையில் ஷிகர் தவன் 5, கேப்டன் விராட் கோலி 3, கே.எல்.ராகுல் 17 ரன்களில் ஆட்டமிழக்க, கேதார் ஜாதவ் டக் அவுட் ஆனார். பின்னர் வந்த தோனி நிதானமாக ஆட, மறுமுனையில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா 118 பந்துகளில் சதமடித்தார்.

இந்தியா 210 ரன்கள் எடுத்திருந்தபோது, ஆத்திரமடைந்த இலங்கை ரசிகர்கள், மைதானத்தில் தண்ணீர் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டு, பிறகு மீண்டும் நடைபெற்றது. இறுதியில் இந்திய அணி 45.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.

தொடக்க வீரர் ரோஹித் சர்மா 145 பந்துகளில் 2 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 124, தோனி 86 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை தரப்பில் தனஞ்ஜெயா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஜஸ்பிரித் பூம்ரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணிகள் இடையிலான 4-ஆவது ஆட்டம் வரும் வியாழக்கிழமை கொழும்பில் நடைபெறுகிறது.

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *