Cricket, India, South Africa, Virat Kohli, Ajinkya Rahane

செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் வெறும் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்திய அணி, தனது மோசமான பேட்டிங் காரணமாக 72 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

Cricket – India v South Africa – First Test cricket match – Newlands Stadium, Cape Town, South Africa – January 8, 2018. India’s captain Virat Kohli makes a run. REUTERS/Sumaya Hisham

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்ரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி முதல் போட்டியை போல் இந்த போட்டியிலும் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அதன் படி முதல் போட்டியில் சொதப்பிய துவக்க வீரர் தவானிற்கு பதிலாக கே.எல் ராகுல் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அதே போல் விக்கெட் கீப்பர் சஹாவிற்கு பதிலாக பார்தீவ் பட்டேலும், புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக இஷாந்த் சர்மா அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.

வெளிநாடுகளில் சிறப்பாக விளையாடி இருக்கும் இந்திய வீரர் அஜிங்க்யா ரஹானேவை மீண்டும் அணியில் சேர்க்கவில்லை. முதல் போட்டியில் அஜிங்க்யா ரஹானேவுக்கு பதிலாக களமிறங்கிய ரோஹித் சர்மா சொல்லிக்கொள்ளும் படி விளையாடவில்லை. அஜிங்க்யா ரஹானே மற்றும் புவனேஸ்வர் குமாருக்கு 2வது டெஸ்டில் இடம் கிடைக்காததால், ட்விட்டரில் இந்திய ரசிகர்கள் சலசலப்பு ஏற்படுத்தினார்கள். இங்கு பாருங்கள்:

https://twitter.com/TestIsRealCrick/status/952100281927553024

  • SHARE

    Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

    விவரம் காண

    பச்சைபசேல் என இருக்கும் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான ஆடுகளம் : தாக்கு பிடிக்குமா இந்தியா

    இந்திய அணி வீரர்கள் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கும் ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டனர். இந்த ஆடுகளம் வேகேபந்து வீச்சிற்கு சாதகமான...

    கோஹ்லியை விட இவர் தான் சிறந்த வீரர்…முன்னாள் வீரர் சொல்கிறார்

    கோஹ்லியை விட இவர் தான் சிறந்த வீரர்…முன்னாள் வீரர் சொல்கிறார் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லியை விட...

    நான் கில்லாடியான ரகசியம் இது தான்… உண்மையை உடைத்த தல தோனி !!

    நான் கில்லாடியான ரகசியம் இது தான்… உண்மையை உடைத்த தல தோனி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தலைசிறந்த விக்கெட் கீப்பராக தான் மாறியது எப்படி...

    சையத் முஸ்தாக் அலி டிராபி… மும்பை அணிக்காக களமிறங்குகிறார் திரிவேதி !!

    சையத் முஸ்தாக் அலி டிராபி… மும்பை அணிக்காக களமிறங்குகிறார் திரிவேதி தென் ஆப்ரிக்காவில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களின் வலை பயிற்சியில் பந்து வீசுவதற்காக,...

    அமைச்சரவையில் மோடி பக்தர்களை விட பிசிசிஐ-யில் கோலி பக்தர்கள் அதிகம்: கேப்டனின் அதிகாரம் குறித்து ராமச்சந்திர குஹா

    பயிற்சியாளர் தேர்வு முதல் அணித்தேர்வு, போட்டிகளில் ஆடும் 11 வீரர்கள் தேர்வு மட்டுமல்லாமல் பல் வேறு விதங்களிலும் இந்திய கேப்டன் விராட் கோலி...