IPL 2017, IPL Betting, IPL 2017 Betting, Cricket, MI, RPS, DD, GL

இந்தியன் பிரீமியர் லீக் இறுதி போட்டி அன்று பெட்டிங் காரணமாக டெல்லி போலீசார் இரண்டு நபர்களை கைது செய்தனர். அவர்களின் பெயரை போலீஸ் வெளியிட்டது. ஒருவரின் பெயர் சுனில் (44 வயது), ஹரியானா மற்றும் மற்றொருவர் பர்வேஸ் (38 வயது), உத்தரபிரதேசம்.

இதை பற்றி போலீசுக்கு தகவல் வந்தது.இந்த தகவலின் படி,இறுதி போட்டி அன்று இரவு 9 மணி அளவில் கிழக்கு டெல்லியின் கிஷான் குஞ் என்னும் இடத்தில் சோதனை நடத்தினர்.

“சுனில் தொலைபேசியில் பேச, பர்வேஸ் நாட்குறிப்பில் குறித்து கொள்கிறார்,” என போலீஸ் கூறியது.

இந்த ஐபில் பல சூதாட்டங்களை பார்த்திருக்கிறது. அந்த இருந்திப்போட்டி நடந்த அதே நாளில், டெல்லின் ரோகினி ஏரியாவில் ஒரு குழுவை கைது செய்தார்கள்.

டெல்லியில் உள்ள ரோகினி என்னும் பகுதியில் மும்பை vs புனேவுக்கு இடையிலான இறுதி போட்டியின்போது பெட்டிங் காரணமாக 9 பேரை போலீஸ் கைது செய்தது. அவர்களிடம் இருந்து 2 போட்டிகள் மற்றும் 10 தொலைபேசிகளை பறிமுதல் செய்தது போலீஸ்.

இறுதி போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

முன்னதாக ராஜஸ்தானில் ஐபில் பெட்டிங் காரணமாக, 43 தொலைபேசிகளுடன் 5 பேரை கைது செய்யப்பட்டது. உத்தரபிரதேசத்தில் 1.17 லட்சம் ரொக்க பணத்துடன் 4 பேரை கைது செய்தது போலீஸ்.

இந்த ஐபில்-இல் டெல்லி vs குஜராத் போட்டி பிக்சிங் என கூறியதற்காக கான்பூரில் 3 நபர்களை போலீஸ் கைது செய்தது. அடுத்து கே கொல்கத்தா vs மும்பை போட்டியின் போது சூதாட்டத்தில் ஈடு பட்டதால்,பேரை கைது செய்தது போலீஸ். அதை தொடர்ந்து பெட்டிங் காரணமாக டெல்லியில் 4 பேரை கைது செய்தது டெல்லி போலீஸ் அங்கிருந்த 2 கணினி, 22 தொலைபேசிகள், மற்றும் LCD-களை போலீஸ் பறிமுதல் செய்தது.

இந்த மாதிரி ஊழல், பெட்டிங் போன்றவற்றைகளை ஒழித்தால் தான், பிற்காலத்தில் ஐபில் செழிப்பாக இருக்கும்.

  • SHARE

    Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

    விவரம் காண

    பச்சைபசேல் என இருக்கும் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான ஆடுகளம் : தாக்கு பிடிக்குமா இந்தியா

    இந்திய அணி வீரர்கள் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கும் ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டனர். இந்த ஆடுகளம் வேகேபந்து வீச்சிற்கு சாதகமான...

    கோஹ்லியை விட இவர் தான் சிறந்த வீரர்…முன்னாள் வீரர் சொல்கிறார்

    கோஹ்லியை விட இவர் தான் சிறந்த வீரர்…முன்னாள் வீரர் சொல்கிறார் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லியை விட...

    நான் கில்லாடியான ரகசியம் இது தான்… உண்மையை உடைத்த தல தோனி !!

    நான் கில்லாடியான ரகசியம் இது தான்… உண்மையை உடைத்த தல தோனி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தலைசிறந்த விக்கெட் கீப்பராக தான் மாறியது எப்படி...

    சையத் முஸ்தாக் அலி டிராபி… மும்பை அணிக்காக களமிறங்குகிறார் திரிவேதி !!

    சையத் முஸ்தாக் அலி டிராபி… மும்பை அணிக்காக களமிறங்குகிறார் திரிவேதி தென் ஆப்ரிக்காவில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களின் வலை பயிற்சியில் பந்து வீசுவதற்காக,...

    அமைச்சரவையில் மோடி பக்தர்களை விட பிசிசிஐ-யில் கோலி பக்தர்கள் அதிகம்: கேப்டனின் அதிகாரம் குறித்து ராமச்சந்திர குஹா

    பயிற்சியாளர் தேர்வு முதல் அணித்தேர்வு, போட்டிகளில் ஆடும் 11 வீரர்கள் தேர்வு மட்டுமல்லாமல் பல் வேறு விதங்களிலும் இந்திய கேப்டன் விராட் கோலி...