Virat Kohli, Ms Dhoni, Champions Trophy, Cricket

இந்தியாவின் முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியின் போது, ஆலோசனை கேட்க தோனியிடம் சென்றார் விராட் கோலி. பீல்ட் செட்டிங் தொடர்பாக ஆலோசனை செய்ய கோலி தோனியிடம் நகர்ந்தார். அதை கேட்ட தோனி, தலையை ஆட்டி பதிலளித்தார்.

விராட் கோலி தோனியிடம் ஆலோசனை கேட்பது இது முதல் முறை அல்ல. கேப்டன் பொறுப்பை கோலி வாங்கியவுடன், பல முறை அணியில் உள்ள சீனியர் வீரர்களிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார், முதன்மையாக தோனியிடம். ஜனவரி மாதம் நடந்த இங்கிலாந்து தொடரின் போது, போட்டியின் கஷ்டமான நேரத்தில் தோனியிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார் விராட் கோலி.

தோனி மற்றும் கோலி, இருவருமே பீல்ட் செட்டிங் செய்வதால், யார் சொல்வதை கேட்பது, யார் சொல்வதை விட்டுவிடுவது என மற்ற அணி வீரர்கள் சந்தேகத்தில் இருப்பார்கள். தோனி இல்லையென்றால், கோலியால் வெல்ல முடியாது என்பது குறிப்பிட தக்கது. தோனி புதிதாக கேப்டன் பொறுப்பை ஏற்ற நேரத்தில், அவரும் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்ற சீனியர் வீரர்களிடம் ஆலோசனை கேட்டுள்ளனர்.

தற்போது, தோனியின் இடத்தில் விராட் கோலி உள்ளார். இந்நிலையில், தனது சீனியர் வீரர்களிடம் ஆலோசனை கேட்கிறார் விராட் கோலி.

தோனியிடம் விராட் கோலி ஆலோசனை கேட்ட வீடீயோவை பாருங்கள்:

https://twitter.com/lKR1088/status/868778285311950848

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *