Cricket, India, Sri Lanka, Virat Kohli, Ravindra Jadeja, Cheteshwar Pujara, Ajinkya Rahane

இந்திய கேப்டன் விராட் கோலி இந்த தொடரை வென்றதன் மூலம் முன்னால் கேப்டன் முகமது அசாருதினின் சாதனையை தகர்த்துள்ளார். விராட் கோலி கேப்டன் பொருப்பேற்றதிலிருந்து அவர் வெற்றி பெரும் 8 வது தொடர் ஆகும். முன்னால் கேப்டன் முகமது அசாருதின் மொத்தம் 7 தொடர்களையே தனது கேப்டன்ஷிப்பில் வென்று இருந்தார் . இதன் மூலம் விராட் கோலி அசாருதினை முந்தி மூன்றாவது இடத்தில் உள்ளார் .

அசாருதின் சாதனையை முறியடித்த விராட் கோலி 1

4-வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இலங்கை அணி ஜடேஜாவின் சுழல் வலையில் சிக்கியது. 3-வது நாளில் நைட் வாட்ச்மேனாக களம் இறங்கிய புஷ்பகுமாரா 16 ரன்கள் எடுத்து அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் சண்டிமால் 2 ரன்கள் மட்டும் எடுத்து ஜடேஜா சுழலில் சிக்கினார். மறுமுனையில் நிதானமாக ஆடிய கருணாரத்னே தனது 6-வது சதத்தை அடித்தார். பின்பு அவருடன் மேத்யூஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 69 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் கருணாரத்னே ஜடேஜா பந்தில் ரஹானேவிடம் கேட்ச் ஆனார்.

அவரைத் தொடர்ந்து மேத்யூஸ் 36 ரன்கள், பெரேரா 4 ரன்கள், டி சில்வா 17 ரன்கள் என அடுத்தடுத்து ஜடேஜா வலையில் வீழ்ந்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 9-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சற்று தாக்குபிடித்து விளையாடிய டிக்வெலா-ஹெராத் ஜோடியை ஹார்திக் பாண்டியா பிரித்தார். டிக்வெலா 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடரந்து பிரதீப்பும் அஸ்வின் பந்தில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.

\
அசாருதின் சாதனையை முறியடித்த விராட் கோலி 2

முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் 70 ரன்கள் குவித்து, இரண்டாம் இன்னிங்ஸ் பந்து வீச்சில் 5 விக்கெட் என மொத்தம் இந்த போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இப்போட்டியில் வென்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது

இந்திய கேப்டன்கள்  வெற்றி பெற்ற டெஸ்ட் தொடர்களின் எண்ணிக்கை இதோ:

  • மகேந்தர சிங் தோனி – 11 தொடர்கள்  வெற்றி
  • சவுரவ் கங்குலி – 10 தொடர்கள்  வெற்றி
  • விராட் கோலி – 8 * தொடர்கள்  வெற்றி
  • முகமது அசாருதின் – 7 தொடர்கள்  வெற்றி
  • ராகுல் ட்ராவிட் – 5 தொடர்கள்  வெற்றி

இந்த இலங்கை தொடர் வெற்றி மூலம் விராட் கோலி அசாருதினை முந்தி  சவுரவ் கங்குலிக்கு (10 தொடர்) பக்கம் வந்துள்ளார்.கடந்த 2014 ல் ஆஸ்திரேலியாவிற்க்கு எதிரான தொடரில் மகேந்தர சிங் தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு  பெற்றதை தொடர்ந்து கேப்டன் பொருப்பு விராட் கோலியின் கைக்கு மாறியது. இந்த மூன்று வருட இடைவெளியிளேயே அடுதடுத்து 8 டெஸ்ட் தொடர்களை வென்று சாதனை பட்டியலில்  இடம் பெற்று விட்டார் .

அசாருதின் சாதனையை முறியடித்த விராட் கோலி 3

மேலும் ஒரு சாதனையாக  இலங்கை மண்ணில் இரண்டு டெஸ்ட் தொடர்களை வென்ற முதல் இந்திய கேப்டன் விராட் கோலி என்ற பெயரையும் பெற்றுள்ளார்.  இந்திய அணி 22 வருடந்களுக்கு பிறகு இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வதும் குறிப்பிட தக்கது

கேப்டன்ஷிப் பொறுப்பு தன் கைக்கு  வந்ததிலிருந்து சாதனைகளில் தவழ்கிறார்  விராட் கோலி . ஆசிய மண்ணில்  அனைத்து சாதனைகளை படைத்து இருந்தாலும் அவருக்கு அக்னி பரிட்சை வெளிநாட்டு சுற்று பயணங்களில்தான் ஆரம்பமாகும் . இந்திய அணி இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ,தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து போன்ற வெளிநாடுகளில் சுற்றுபயணம் செய்யும் போது தான் விராட் கோலியின் முழு கேப்டன்ஷிப் திறமை  பரிசோதிக்கபடும் .

 

இந்திய அணி இதற்க்கு முன்னர் இந்நாடுகளுக்கு சுற்றுபயணம் செய்த போது டெஸ்ட் தொடர்களை இழந்ததும் குறிப்பிடத்தக்கது. இது விராட் கோலிக்கு சவாலாக அமையும் ஏனெனில் அந்நாட்டு ஆடுகங்களில் கோலியே கூட  நன்றாக பேட்டிங் செய்ய தினறலாம்.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *