Football, Lionel Messi,

மெஸ்சியின் மதிப்பு 5343 கோடி ரூபாயாக உள்ள நிலையில், வேறு கிளப்பிற்கு ப்ரீ டிரான்ஸ்பராக செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

அர்ஜென்டினாவைச் சேர்ந்த 30 வயதாகும் மெஸ்சி, கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து அதாவது 16 வயதில் இருந்தே பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். பார்சிலோனா அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வரும் மெஸ்சி, பார்சிலோனா கிளப்பிற்காக பல்வேறு சாம்பியன் பட்டங்களை வாங்கி கொடுத்துள்ளார். இவரும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் பார்சிலோனா அணிக்காக விளையாடிய நெய்மர் 200 மில்லியன் டாலர் அளவிலான பெரும் தொகைக்கு பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்கு மாறினார்.

30 வயதாகும் மெஸ்சி பார்சிலோனா அணியுடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் இருந்தார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் பார்சிலோனா அணி மெஸ்சி உடனான ஒப்பந்தத்தை நீட்டித்தது. அப்போது மெஸ்சியின் buyout clause 700 மில்லியன் யூரோ என்று தெரிவித்திருத்தது. அமெரிக்க டாலருக்கு 843 மில்லியனும், இந்திய மதிப்பிற்கு 5343 கோடி ரூபாயும் ஆகும். வேறு எந்த அணியும் மெஸ்சியை நாடிவிடக் கூடாது என்பதற்காக இவ்வளவு பெரிய தொகையை நிர்ணயித்தது.

Football, Lionel Messi,

இந்நிலையில்தான் ஸ்பெயின் தலைமையில் இயங்கி வந்த கேடலோனியா பிராந்தியத்தில் தனி நாடு கோரிக்கை எழுந்தது. இதற்கான வாக்கெடுப்பில் கேடலோனியா பிரிவதற்காக ஆதரவாக அதிக அளவில் வாக்களிக்கப்பட்டது. இதனால் ஸ்பெயினி்ல் இருந்து கேடலோனியா எப்போது வேண்டுமானாலும் பிரிய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கேடலோனியா பிராந்தியத்தில்தான் பார்சிலோனா கிளப் உள்ளது. இதனால் பார்சிலோனா லா லிகா தொடரில் விளையாட சாத்தியமில்லை. பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாட்டில் நடைபெறும் லீக் உடன் இணையலாம்.

மெஸ்சி தனது ஒப்பந்தத்தில் லா லிகாவில் விளையாடினால் மட்டும்தான் இந்த ஒப்பந்தம் செல்லும். பார்சிலோனா வேறு நாட்டு லீக்கில் இணைந்தால் ஒப்பந்தம் கட்டுப்படுத்தாது என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக என்று உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தியின்படி பார்த்தால் ஒருவேளை கேடலோனியா பரிந்து பார்சிலோனா வேறு நாட்டு லீக்கில் விளையாடினால் மெஸ்சி எந்தவித நிபந்தனையும் இல்லாமல் ப்ரீ டிரான்ஸ்பர் மூலம் வேறு அணிக்குச் செல்லலாம். இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அது பார்சிலோனா கிளப்பிற்கு பெரிய இழப்பாகும். மெஸ்சி வாங்கும் கிளப்பிற்கு ஜாக்பாட் ஆகும்.

  • SHARE

    Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

    விவரம் காண

    பச்சைபசேல் என இருக்கும் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான ஆடுகளம் : தாக்கு பிடிக்குமா இந்தியா

    இந்திய அணி வீரர்கள் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கும் ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டனர். இந்த ஆடுகளம் வேகேபந்து வீச்சிற்கு சாதகமான...

    கோஹ்லியை விட இவர் தான் சிறந்த வீரர்…முன்னாள் வீரர் சொல்கிறார்

    கோஹ்லியை விட இவர் தான் சிறந்த வீரர்…முன்னாள் வீரர் சொல்கிறார் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லியை விட...

    நான் கில்லாடியான ரகசியம் இது தான்… உண்மையை உடைத்த தல தோனி !!

    நான் கில்லாடியான ரகசியம் இது தான்… உண்மையை உடைத்த தல தோனி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தலைசிறந்த விக்கெட் கீப்பராக தான் மாறியது எப்படி...

    சையத் முஸ்தாக் அலி டிராபி… மும்பை அணிக்காக களமிறங்குகிறார் திரிவேதி !!

    சையத் முஸ்தாக் அலி டிராபி… மும்பை அணிக்காக களமிறங்குகிறார் திரிவேதி தென் ஆப்ரிக்காவில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களின் வலை பயிற்சியில் பந்து வீசுவதற்காக,...

    அமைச்சரவையில் மோடி பக்தர்களை விட பிசிசிஐ-யில் கோலி பக்தர்கள் அதிகம்: கேப்டனின் அதிகாரம் குறித்து ராமச்சந்திர குஹா

    பயிற்சியாளர் தேர்வு முதல் அணித்தேர்வு, போட்டிகளில் ஆடும் 11 வீரர்கள் தேர்வு மட்டுமல்லாமல் பல் வேறு விதங்களிலும் இந்திய கேப்டன் விராட் கோலி...