ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த இறுதி போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையை மும்பை அணி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் புணே அணிக்காக விளையாடிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 2 சாதனைகளை படைத்துள்ளார்.

வாஷிங்டன் சுந்தர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடிய இளம் வீரர் என்ற சாதனையை 17 வயது 228 நாள்களில் படைத்துள்ளார். முன்னதாக, ரவீந்திர ஜடேஜா 19 வயது 178 நாள்கள் (2008), மனிஷ் பாண்டே 19 வயது 256 நாள்கள் (2009) விளையாடி உள்ளனர்.

மேலும், மற்றொரு சாதனையாக, ஐபிஎல் இறுதிப்போட்டியில் 4 ஓவர்கள் வீசி குறைந்த ரன்கள் அளித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். இவர் நேற்றைய இறுதிப்போட்டியில் 4 ஓவர்கள் வீசி 13 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதற்கு முன் அஷ்வின், கும்ப்ளே, ஆர்பிசிங் ஆகியோர் 4 ஓவர்களை வீசி தலா 16 ரன்களை வழங்கியுள்ளனர்.

அஸ்வின்னை தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் சூழல் பந்தில் கலக்கி கொண்டு வருகிறார், அஸ்ஹவினை போல வாஷிங்டன் சுந்தர் சாதனைகளை படைத்தது தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பர் என தமிழ் நாட்டு ரசிகர்கள் எண்ணுகிறார்கள்.

 • SHARE

  Cricket Lover | Movie Lover | love to write articles

  விவரம் காண

  பச்சைபசேல் என இருக்கும் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமான ஆடுகளம் : தாக்கு பிடிக்குமா இந்தியா

  இந்திய அணி வீரர்கள் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கும் ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டனர். இந்த ஆடுகளம் வேகேபந்து வீச்சிற்கு சாதகமான...

  கோஹ்லியை விட இவர் தான் சிறந்த வீரர்…முன்னாள் வீரர் சொல்கிறார்

  கோஹ்லியை விட இவர் தான் சிறந்த வீரர்…முன்னாள் வீரர் சொல்கிறார் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோஹ்லியை விட...

  நான் கில்லாடியான ரகசியம் இது தான்… உண்மையை உடைத்த தல தோனி !!

  நான் கில்லாடியான ரகசியம் இது தான்… உண்மையை உடைத்த தல தோனி சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தலைசிறந்த விக்கெட் கீப்பராக தான் மாறியது எப்படி...

  சையத் முஸ்தாக் அலி டிராபி… மும்பை அணிக்காக களமிறங்குகிறார் திரிவேதி !!

  சையத் முஸ்தாக் அலி டிராபி… மும்பை அணிக்காக களமிறங்குகிறார் திரிவேதி தென் ஆப்ரிக்காவில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களின் வலை பயிற்சியில் பந்து வீசுவதற்காக,...

  அமைச்சரவையில் மோடி பக்தர்களை விட பிசிசிஐ-யில் கோலி பக்தர்கள் அதிகம்: கேப்டனின் அதிகாரம் குறித்து ராமச்சந்திர குஹா

  பயிற்சியாளர் தேர்வு முதல் அணித்தேர்வு, போட்டிகளில் ஆடும் 11 வீரர்கள் தேர்வு மட்டுமல்லாமல் பல் வேறு விதங்களிலும் இந்திய கேப்டன் விராட் கோலி...