ஐ.சி.சி புதிய விதிகள் - ரெட் கார்டு, அந்ததரத்தில் ரன் அவுட் மேலும் பல..... 1

கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக ஐசிசி புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதில் விளையாட்டு வீரர்கள் தவறாக நடந்து கொண்டால் களத்தை விட்டு உடனே வெளியேற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரர் பேட்டை கிரீஸில் வைத்த பிறகு கால்படாமல் இருந்தாலும்  அவுட் கிடையாது என்று அறிவித்துள்ளது. டி 20 போட்டியில் அவுட்டை எதிர்த்து பேட்ஸ்மேன் அப்பீல் செய்ய முடியாது என்று புதிய விதிமுறையை தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விதிமுறைகள் செப்டம்பர் 28 ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) புதிய விதிமுறைகள் செப்டம்பர் 28-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஆனால் இந்த விதிமுறைகள் இந்தியா- ஆஸ்திரேலியா தொடருக்கு கிடையாது. ஏனெனில் இந்த போட்டித் தொடர் தொடங்கி பாதியில் தான் அதை கொண்டு வர முடியும்.

அதனால் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படக்கூடும். இதை கருத்தில் கொண்டு ஏற்கனவே உள்ள விதிகள்படியே இந்தியா- ஆஸ்திரேலியா போட்டிகளை நடத்த ஐ.சி.சி. அனுமதித்து இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

டெஸ்ட் போட்டியில் 80 ஓவருக்கு பிறகு டி.ஆர்.எஸ். முறைக்கு இனி அனுமதி கிடையாது. 20 ஓவர் போட்டிகளில் நடுவரின் முன்பு மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  1. பேட்டுகளின் அளவுகளில் குறிப்பிட்ட கட்டுப்பாடுகள், பேட்டுகளில் அளவு எட்ஜகளில் 40 மில்லி மீட்டருக்கு மிகாமலும், மொத்தமாக இடையில் 67 மில்லி மீட்டருக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும், இந்த அளவை அளக்க அம்பையர்கள் அளவுகோலுடன் வருவார்கள்
  2. ஐ.சி.சி புதிய விதிகள் - ரெட் கார்டு, அந்ததரத்தில் ரன் அவுட் மேலும் பல..... 2
  3. களத்தில் வன்முறை நோக்குடன் மிக மோசமாக நடந்து கொள்ளும் வீரரை கால்பந்து பாணியில் வெளியேற்றுவது, – வீரர்களை விக்கெட் எடுத்தவுடன் பந்து வீச்சாளர் அளிக்கும் மோசமான செண்ட்-ஆஃப் இதற்கு ரெட் கார்டு கொடுக்கப்படும்

ஐ.சி.சி புதிய விதிகள் - ரெட் கார்டு, அந்ததரத்தில் ரன் அவுட் மேலும் பல..... 3

  1. அம்பையரிடம் உடல் ரீதியாக தொட்டாலோ அல்லது தாக்குதல் நடத்துவது போல் அனுகினாலோ அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார், அந்த ஆட்டத்தில் மீதம் உள்ள ஒவர்கள் ஆட முடியாது, அந்த அணி இருக்கும் வீரர்களை வைத்து தான் ஆடியாக வேண்டும்

 

  1. டெஸ்ட் இன்னிங்சில் 80 ஓவர்களுக்கு பிறகு கூடுதலாக டி.ஆர்.எஸ். வாய்ப்பு வழங்கும் முறையை ரத்து செய்வது – மொத்தம் இனி ஒரு இன்னிங்சுக்கு இரண்டு டி.ஆர்.எஸ் மட்டுமே வழங்கப்படும்

 

ஐ.சி.சி புதிய விதிகள் - ரெட் கார்டு, அந்ததரத்தில் ரன் அவுட் மேலும் பல..... 4

  1. ரன் எடுக்க ஓடுகையில், கிரீசுக்குள் நுழைந்தாலும்கூட ஸ்டம்பு தாக்கப்படும் சமயத்தில் வீரரின் பேட்டோ அல்லது கால்களோ அந்தரத்தில் இருந்தால் ரன்-அவுட் வழங்கும் முந்தைய முறையை தளர்த்தி பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவது

 

ஐ.சி.சி புதிய விதிகள் - ரெட் கார்டு, அந்ததரத்தில் ரன் அவுட் மேலும் பல..... 5

  1. கேட்சுகள் பவுண்டரிக்கு சென்று தட்டு விட்டு பிடித்ததை போல் பிடித்தால் இனி விக்கெட் தரப் படாது, பந்தின் முதல் தொடுதலிலேயே கேட்சை பிடித்தாக வேண்டும் இல்லையெனில் அது பவுண்டரி என் அறிவிக்கப்படும்

உள்ளிட்டவை புதிய விதிகளில் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

செப்டம்பர் 28-ந்தேதி தொடங்கும் வங்காளதேசம்-தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான்-இலங்கை ஆகிய அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரில் இருந்து இந்த புதிய விதிகள் அமல்படுத்தப்படும். இந்தியாவை பொறுத்தவரை நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து புதிய விதிமுறைக்குட்பட்டு விளையாடும்.

Leave a comment

Your email address will not be published.