மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், ஐபில், ஐபில் 2017, ஐபில் 10, கிரிக்கெட்

ரைசிங் புனே சூப்பர்ஜெய்ன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தன்னுடைய முதல் வெற்றியை ருசித்தது குஜராத் லயன்ஸ். அதே நாளில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ். இதனால் இரண்டு அணியும் கடைசியாக விளையாடிய போட்டியில் வெற்றியை கண்டுள்ளது.

இந்த ஐபில்-இல் மும்பை இந்தியன்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஐதாபாத்திடம் தோல்வியை கண்டாலும், அடுத்து விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றது. அந்த அணியில் சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் இன்னும் சிறந்த பந்து வீச்சாளர்களை குஜராத் லயன்ஸ் அணி பார்க்கவில்லை என்று தான் சொல்லவேண்டும்.

ரைசிங் புனே சூப்பர்ஜெய்ன்ட்ஸுக்கு எதிரான போட்டியில் விளையாடிய அதே குஜராத் வீரர்கள் தான் இன்றும் மும்பையிடம் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்க படுகிறது. குஜராத் வீரர்கள் யாரும் நிலையாக விளையாடாமல் இருப்பது தான் அந்த அணியின் தோல்விற்கு காரணம். அவர்களின் டாப்-ஆர்டர் வீரர்களையே அந்த அணி நம்பியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ்:

மும்பையில் இருக்கும் அனைவருமே நட்சத்திர வீரர்கள் என்று தான் சொல்லவேண்டும். பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்திலும் அசத்திக்கொண்டு வருகிறது மும்பை இந்தியன்ஸ். பட்லர், ரோகித் சர்மா, பொல்லார்ட், பாண்டியா சகோதரர்கள், பும்ரா, மலிங்கா என்னும் ஆபத்தான வீரர்களை கொண்டுள்ளது மும்பை இந்தியன்ஸ்.

குஜராத் லயன்ஸ்:

குஜராத் அணியில் பேட்டிங் பலமாக இருந்தாலும், பந்துவீச்சு சொல்லும் அளவிற்கு இல்லை. பிரண்டன் மெக்கல்லம், வெய்ன் ஸ்மித், சுரேஷ் ரெய்னா, ஆரோன் பின்ச், தினேஷ் கார்த்திக் ஆகிய இவர்களையே நம்பி இருக்கிறது குஜராத் லயன்ஸ்.

நேருக்கு நேர்:

இதுவரை மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகள் நேருக்கு நேர் 2 போட்டிகளில் மோதியுள்ளது. அந்த இரண்டு போட்டிகளிலும் குஜராத் லயன்ஸ் அணியே வெற்றி பெற்றது. முதல் போட்டியில் 143 ரன்னும், இரண்டாம் போட்டியில் 173 ரன்னும் சேஸ் செய்து மும்பை அணியை வீழ்த்தியது குஜராத் லயன்ஸ்.

இந்த ஐபில்-இல்:

மும்பை இந்தியன்ஸ் – தோல்வி, வெற்றி, வெற்றி, வெற்றி.

குஜராத் லயன்ஸ்  தோல்வி, தோல்வி, வெற்றி.

சாத்தியமான அணி:

மும்பை இந்தியன்ஸ் – ரோகித் சர்மா, பார்திவ் படேல், நிதிஷ் ராணா, ஜோஸ் பட்லர், ஹர்டிக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, கிரண் பொல்லார்ட், ஹர்பஜன் சிங்க், மிட்சல் மெக்லனகன், லசித் மலிங்க, ஜேஸ்ப்ரிட் பும்ரா.

குஜராத் லயன்ஸ் – பிரண்டன் மெக்கல்லம், வெய்ன் ஸ்மித், சுரேஷ் ரெய்னா, ஆரோன் பின்ச், தினேஷ் கார்த்திக், இஷான் கிஷான், ரவீந்திர ஜடேஜா, ஆண்ட்ரே டை, பிரவீன் குமார், பசில் தம்பி, ஷடப் ஜகதி.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *