கவுதம் கம்பிர், ராபின் உத்தப்பா, ஷகிப் அல் ஹசன், ஐபில், ஐபில் 2017, கிரிக்கெட், ,விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பல நட்சத்திர வீரர்கள் இருப்பதால் இந்த ஐபில் தொடரில் பலம்வாய்ந்த அணியாக காணப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு பிடித்த கிரிக்கெட் வீரரின் பெயர்களை சொல்லினர்.

கிரிக்புஸ் நடத்தும் ‘பியாண்ட் தி பௌண்டரி’ என்னும் தலைப்பில், ஹர்ஷா போக்லே கேட்ட பொழுது, கவுதம் கம்பிர், ராபின் உத்தப்பா, ஷகிப் அல் ஹசன், ட்ரெண்ட் போல்ட் , கிறிஸ் வோக்ஸ் ஆகிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் அவர்களுக்கு பிடித்த வீரர்களின் பெயரை சொல்லினர்.

கம்பிரிடம் உங்களுக்கு பிடித்த வீரர் யார் என ஹர்ஷா போக்லே கேட்ட பொழுது, கவுதம் கம்பிர் தென்னாபிரிக்காவின் நட்சத்திர வீரர் ஏபி டி வில்லியர்ஸ் பெயரை கூறினார்.

எனக்கு விராட் கோலியை ரொம்ப பிடிக்கும், பேட்டிங்காக மட்டும் அல்ல தனிப்பட்ட முறையிலும் அவரை மிகவும் பிடிக்கும் என ராபின் உத்தப்பா கூறினார்.

இந்த கால கட்டத்தில் எனக்கு விராட் கோலி தான் எனக்கு பிடித்த இந்திய வீரர். ஆனால் எப்பொழுதும் எனக்கு பிடித்த இந்திய வீரர் ராகுல் டிராவிட் என ஷகிப் அல் ஹசன் கூறினார். முகமது ரபிக் தான் எனக்கு பிடித்த வங்கதேச வீரர், அவரை கண்டு தான் எனக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகரித்தது எனவும் கூறினார்.

நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட்டுக்கு தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் தான் பிடித்த வீரர் என்றார். கிறிஸ் வோக்ஸ்க்கு பிடித்த பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அண்டர்சனும், பிடித்த பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் எனவும் கூறினார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *