10 முக்கிய வீரர்கள் இல்லாமல் நடைபெறும ஐ.பி.எல் தொடர்....? யார் யார் தெரியுமா..? 1

10 முக்கிய வீரர்கள் இல்லாமல் நடைபெறும ஐ.பி.எல் தொடர்….? யார் யார் தெரியுமா..?

இந்தியாவில் கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்ளூர் டி.20 தொடரான ஐ.பி.எல் தொடர் மிக பிரமாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை 12 தொடர்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த வருடத்திற்கான ஐ.பி.எல் தொடர் கடந்த மார்ச் மாத இறுதியில் துவங்க இருந்தது. ஆனால் கொரோனாவின் தாக்கம் காரணமாக காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்த ஐ.பி.எல் தொடரானது, செப்டம்பர் மாதம் அமீரகத்தில் வைத்து நடத்தப்பட்டும் என பி.சி.சி.ஐ., கடந்த சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தது. செப்டம்பர் மாதம் 19ம் தேதி துவங்கும் இந்த தொடரானது நவம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது.

10 முக்கிய வீரர்கள் இல்லாமல் நடைபெறும ஐ.பி.எல் தொடர்....? யார் யார் தெரியுமா..? 2

கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாததால் ஐ.பி.எல் தொடருக்கான தேதி அறிவிக்கப்பட்டாலும் நாளுக்கு நாள் சிக்கல்கள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. குறிப்பாக வெளிநாட்டு வீரர்கள் பலர் இந்த தொடரில் பங்கேற்பார்களா இல்லையா என்பது தொடர்ந்து கேள்விக்குரியாகவே உள்ளது.

அந்தவகையில், இந்த ஐ.பி.எல் தொடரில் விளையாடும் வாய்ப்பை தவறவிட வாய்ப்புள்ள 10 முக்கிய வீரர்களின் பெயர்கள் மற்றும் அவர்கள் விளையாடும் அணிகள் குறித்தான விபரம் பின்வருமாறு.

10 முக்கிய வீரர்கள் இல்லாமல் நடைபெறும ஐ.பி.எல் தொடர்....? யார் யார் தெரியுமா..? 3

1 – ஏ.பி டிவில்லியர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

2- காகிஷோ ரபாடா – டெல்லி கேப்பிடல்ஸ்

3 – டேவிட் வார்னர் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.

4 – ஸ்டீவ் ஸ்மித் – ராஜஸ்தான் ராயல்ஸ்

5 – பேட் கம்மின்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

6 – கிளன் மேக்ஸ்வெல் – கிங்ஸ் லெவன் பஞ்சாப்

7 – ஜாஸ் பட்லர் – ராஜஸ்தான் ராயல்ஸ்

8 – பென் ஸ்டோக்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ்

9 – ஜோஃப்ரா ஆர்ச்சர் – ராஜஸ்தான் ராயல்ஸ்

10 – இயான் மோர்கன் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள 10 முக்கிய வீரர்களும் லாக் டவுன் சிக்கல் மற்றும் வெளிநாடுகளில் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்ட சர்வதேச போட்டிகள் மாதிரியான காரணத்தினால் ஐ.பி.எல் அணிகளால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ள வெளிநாட்டு வீரர்கள் இந்த தொடர் முழுவதுமாக தவிர்க்க வேண்டியிருக்கும் என பரவலாக பேசப்படுகிறது.

10 முக்கிய வீரர்கள் இல்லாமல் நடைபெறும ஐ.பி.எல் தொடர்....? யார் யார் தெரியுமா..? 4

மேலே குறிப்பிடப்பட்டுள்ள 10 வீரர்களில் ஐந்து வீரர்கள் இந்த விளையாடவில்லை என்றாலும் அது ஐ.பி.எல் தொடருக்கு மிகப்பெரும் பின்னடைவாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *