Sachin Tendulkar,Sachin Tendulkar Records, Sachin Tendulkar Cricket, Cricket

சச்சினுக்கு எந்த ஒரு அறிமுகமும் தேவை இல்லை என்று தான் சொல்லவேண்டும். பேட்ஸ்மேன் வைத்துக்கொள்ள வேண்டிய அனைத்து சாதனைகளும் சச்சின் வைத்து கொண்டிருக்கிறார். அவருடைய கிரிக்கெட் திறமையால் இந்தியாவில் மட்டுமில்லாமல் கிரிக்கெட் விளையாடும் அணைத்து நாடுகளிலும் சச்சினை புகழ்ந்தனர்.

இவர் கிரிக்கெட்டுக்காக 24 வருடங்கள் அர்ப்பணித்து இருக்கிறார். இதன் மூலம் அவர் பல ரன்கள் மற்றும் பல சாதனைகளை படைத்துள்ளார். இதனால் அவரை ‘கிரிக்கெட்டின் கடவுள்’ என்று அழைக்க படுகின்றனர். அனைத்து நாடுகளிலும் அவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவின் நிலைமையை மாற்றியவர் இவர்தான் எனவும் கூறலாம். பல நாடுகளில் கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாக பார்ப்பார்கள். ஆனால், இந்தியாவில் கிரிக்கெட்டை மதமாகவும் சச்சினை கடவுளாகவும் பார்க்கின்றனர்.

அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் புரிந்த 10 நம்பமுடியாத சாதனைகளை இப்போது பார்க்கலாம்.

1. சச்சின் தான் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் அடித்துள்ளார். இவர் ஒருநாள் போட்டியில் 18426 ரன்னும், டெஸ்டில் 15921 ரன்னும் அடித்து மொத்தமாக 34347 ரன் அடித்துள்ளார்.

2. அவருடைய கிரிக்கெட் வரலாற்றில், 200 டெஸ்ட் போட்டியும், 463 ஒருநாள் போட்டியும், ஒரே ஒரு டி20 போட்டியும் விளையாடியுள்ளார்.

3. கிரிக்கெட்டில் 100 சதம் அடிக்கமுடியாது என நினைத்த இந்த உலகத்தில், சச்சின் 100 சதம் அடித்து காட்டினார்.

4. சச்சின் டெண்டுல்கர் தான் கிரிக்கெட்டில் அதிகமான அரை-சதங்கள் அடித்திருக்கிறார்.

5. சச்சின் 6 உலக-கோப்பை தொடரில் விளையாடியுள்ளார். அவர்தான் உலககோப்பை தொடரில் அதிக ரன் அடித்துள்ளார். இன்னும் கூட அதை யாராலும் முறியடிக்கவில்லை.

6. 90-இல் ஆடிக்கொண்டு இருக்கும்போது 27 முறை அவுட் ஆகியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

7. மற்ற வீரர்களை விட சச்சின் அதிக ஸ்டேடியம்களில் விளையாடியுள்ளார்.

8. சச்சின் தான் கிரிக்கெட்டில் அதிக நான்குகளை (Fours) விளாசியுள்ளார்.

9. டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 13000, 14000, 15000 ரன் அடித்தவர் சச்சின் டெண்டுல்கர்.

10. அவர் விளையாடிய 6வது உலகக்கோப்பை மற்றும் 6வது ஐபில் தொடரை வென்றுள்ளார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *