சிஎஸ்கேல எப்படி இருந்த மனுஷன்யா அவரு… ஆர்சிபி அணியின் கேப்டன் என்பதால் 12 லட்சம் அபராதம் கட்டும் டு பிளசிஸ்! – ஷாக் நியூஸ்!

லக்னோ அணிக்கு எதிரான போட்டியின்போது, வரையறுக்கப்பட்ட நேரத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களை ஆர்சிபி அணி வீசிமுடிக்கவில்லை. இதனால் ஆர்சி பிஅணியின் கேப்டனாக இருக்கும் டு பிளசிஸ் சம்பளத்திலிருந்து 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

பிசிசிஐ மற்றும் ஐபிஎல் விதிமுறைப்படி, எந்த ஒரு அணியும் குறிப்பிட்ட நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி முடிக்க வேண்டும். அதற்குள் வீசி முடிக்கவில்லை என்றால், தாமதமாகும் ஒவ்வொரு ஓவருக்கும் 30 யார்ட் வட்டத்திற்கு வெளியே 4 வீரர்கள் மட்டுமே வெளியில் நிற்க அனுமதிக்கப்படும்.

அது மட்டுமல்லாது, போட்டி முடிந்தவுடன் ஸ்லோவாக ஓவர்கள் வீசிய அணியின் கேப்டனுக்கு அபராதமும் விதிக்கப்படும். அந்த அபராதம் சம்பளத்திலிருந்து பாதி அல்லது 12 லட்சம் ரூபாய் இரண்டில் எது அதிகமோ அதனைக் கட்டவேண்டும்.

இதன் அடிப்படையில், லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்கவில்லை. இரண்டு ஓவர்கள் தாமதமாக சென்றது. ஆகையால் இரண்டு ஓவர்களுமே ஒரு வீரர் வெளியிலிருந்து 30 யார்டு வட்டத்திற்கு உள்ளே வந்து நிற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. பின்னர் போட்டி முடிந்தவுடன் ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளசிஸ்-க்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆர்சிபி அணி போட்டியின் கடைசி ஓவரின் கடைசி பந்தில் தோல்வியுற்றது. இந்த சோகத்தில் இருக்கும் அணியின் கேப்டனுக்கு இப்படி கூடுதலாக ஒரு சோகம் வந்திருப்பதால் ரசிகர்களும் சற்று வருத்தத்தில் இருக்கின்றனர். இந்த நேரத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் சிலர், அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்திருக்கலாம். இங்கு இருந்தபொழுது ராஜாவாக இருந்தார் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அபராதம் விதித்த பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “கிட்டத்தட்ட இரண்டு ஓவர்கள் வரை ஆர்சிபி அணி தாமதமாக வீசியது. இதனால் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இது முதல் வார்னிங். இன்னும் இரண்டு முறை வார்னிங் கொடுக்கப்பட்டால், பின்னர் அணியின் கேப்டன் இரண்டு போட்டிகளுக்கு வெளியில் அமர வேண்டும்.” என்று தெளிவாக குறிப்பிடப்பட்டது.

Mohamed:

This website uses cookies.