மும்பை இந்தியன்ஸை வென்று மூன்றாவது வெற்றியை பதிவு செய்ய போகும் டெல்லி அணி இதுதான் ! 1

மும்பை இந்தியன்ஸை வென்று மூன்றாவது வெற்றியை பதிவு செய்ய போகும் டெல்லி அணி இதுதான் !

14வது ஐபிஎல் சீசன் தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 9 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 12 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது.

இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிட்டத்தில் இருக்கிறது. இதையடுத்து இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மூன்றாவது இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸை வென்று மூன்றாவது வெற்றியை பதிவு செய்ய போகும் டெல்லி அணி இதுதான் ! 2

இன்று (ஏப்.20) நடைபெறும் 13வது லீக் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இரு அணிகளும் இதுவரை 28 போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளது. இதில் மும்பை இந்தியன்ஸ் 16 போட்டிகளிலும், டெல்லி கேப்பிடல்ஸ் 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் பிருத்வி ஷா விளையாடுவார்கள்.

மும்பை இந்தியன்ஸை வென்று மூன்றாவது வெற்றியை பதிவு செய்ய போகும் டெல்லி அணி இதுதான் ! 3

மிடில் ஆர்டரில் ஸ்டீவன் ஸ்மித், ரிஷாப் பந்த், மார்கஸ் ஸ்டோய்னிஸ், லலித் யாதவ், களமிறங்குவார்கள். பந்துவீச்சாளர்களாக கிறிஸ் வோக்ஸ், ஆர் அஸ்வின், ககிசோ ரபாடா, அவேஷ் கான், அமித் மிஸ்ரா விளையாடுவார்கள்.

டெல்லி கேப்பிடல்ஸ் சாத்தியமான லெவன்: ஷிகர் தவான், பிருத்வி ஷா, ஸ்டீவன் ஸ்மித், ரிஷாப் பந்த், மார்கஸ் ஸ்டோய்னிஸ், லலித் யாதவ், கிறிஸ் வோக்ஸ், ஆர் அஸ்வின், ககிசோ ரபாடா, அவேஷ் கான், அமித் மிஸ்ரா

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *