Cricket, Champions Trophy, Yuvraj Singh, India, Bangladesh

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியின் போது தனது 300வது ஒருநாள் போட்டியை விளையாடினார் யுவராஜ் சிங். ஒருநாள் போட்டியில் 300 போட்டி விளையாடிய 5வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் இவர். இவருக்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் மற்றும் முகமது அசாருதீன் ஆகியோர் 300 ஒருநாள் போட்டிகள் விளையாடியுள்ளனர்.

சாம்பியன்ஸ் டிராபி 2017: யுவராஜ் சிங் போல் இருக்கும் ஒருவர் இணையதளத்தில் 'வைரல்' ஆகி வருகிறார் 1

அதற்காக அவர் உற்சாகத்தில் இருந்தார், ஆனால் இன்னொருவர் அதாவது இரண்டாவது யுவராஜ் சிங் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். யுவராஜ் சிங்கை பார்க்க அவரை போலவே இருக்கும் ஒருவர் மைதானத்திற்கு வந்திருந்தார். அவருடன் சேர்ந்து யுவராஜ் சிங் போட்டோவும் எடுத்துக்கொண்டார். யுவராஜை போலவே தாடி, இந்தியன் ஜெர்சி மற்றும் கண்ணாடி என அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தினார்.

அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியதற்கு பிறகு அவர் யுவராஜ் சிங்குடன் போட்டோ எடுத்துக்கொண்டார். இதனை ட்விட்டர் பக்கத்தில் பிசிசிஐ பதிவுசெய்தது.

அவரை போலவே இருப்பதை கண்ட யுவராஜ் சிங், அவருடன் சிரித்து பேசினார். பிசிசிஐ ட்வீட் செய்ததற்கும் பதிலளித்தார் யுவராஜ் சிங்.

ஆனால், யுவராஜ் சிங் போலவே இருக்கும் அவரை பார்த்து ஆச்சர்யப்பட்டவர்கள் பல, அதில் ராபின் உத்தப்பா மற்றும் சானியா மிர்சா ஆகியோர் இதில் ஒருவர்.

இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதியது. முதலில் விளையாடிய வங்கதேசம் அணி இரண்டு விக்கெட்டுகளை இழக்க, இக்பால் மற்றும் ரஹீம் பொறுமையாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர்.

Cricket, Yuvraj Singh, Champions Trophy, BCCI, India, Suresh Raina, Rishabh Pant, Krunal Pandya

ஒரு நிலையில் வங்கதேசம் 300க்கு மேல் அடிக்கும் என்று எதிர்பார்த்த போது, கேதார் ஜாதவ் ஒரு இரண்டு விக்கெட்டுகளை எடுத்து இந்திய ரசிகர்களுக்கு தெம்பு வரவைத்தார். அதன் பிறகு வந்த வீரர்கள் சரியாக நிலைத்து நின்று விளையாததால், 50 ஓவர் முடிவில் 264 ரன்கள் மட்டுமே குவித்தது.

இந்த இலக்கை எட்டினால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறலாம் என்னும் முனைப்புடன் விளையாடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தொடக்கத்தில் இருந்தே அடித்து ஆட தொடங்கினர். ஷிகர் தவான் பெவிலியன் சென்ற பிறகு ரோகித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்த கோலி, சிறப்பாக விளையாடினார்.

Cricket, Champions Trophy, Champions Trophy Semi-final, Champions Trophy Semi-final details, Champions Trophy Semi-final venue, Champions Trophy Semi-final date, India, Bangladesh, England

ரோகித் சர்மா சதம் அடிக்க, கோலி 96-ரன்களில் இருக்க அந்த இலக்கை எட்டியது இந்தியா. இதனால், இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்தியா.



  • SHARE
    Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

    விவரம் காண

    சீனியர் பந்துவீச்சாளர் அதிரடி நீக்கம்; இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு !!

    சீனியர் பந்துவீச்சாளர் அதிரடி நீக்கம்; இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டிக்கான இந்திய அணியின்...

    இந்திய அணியை வீழ்த்த இதை செய்ய வேண்டும்; நியூசிலாந்து வீரர்களுக்கு சீனியர் வீரர் அட்வைஸ் !!

    இந்திய அணியை வீழ்த்த இதை செய்ய வேண்டும்; நியூசிலாந்து வீரர்களுக்கு சீனியர் வீரர் அட்வைஸ் உலகத்தரம் வாய்ந்த இந்திய பேட்ஸ்மென்களுக்கு எதிராக பந்து வீச்சில்...

    இந்தியா இதை செய்யவிட்டால் உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம்; பாகிஸ்தான் உறுதி !!

    இந்தியா இதை செய்யவிட்டால் உலகக்கோப்பையில் விளையாட மாட்டோம்; பாகிஸ்தான் உறுதி பாகிஸ்தானில் இந்த ஆண்டு செப்டம்பரில் நடக்கும் ஆசியக் கோப்பைப் போட்டியில் இந்திய அணி...

    அதிரடி மாற்றத்துடன் களமிறங்கும் நியூசிலாந்து; இரண்டாவது டி.20 போட்டிக்கான அணி அறிவிப்பு !!

    அதிரடி மாற்றத்துடன் களமிறங்கும் நியூசிலாந்து; இரண்டாவது டி.20 போட்டிக்கான அணி அறிவிப்பு இந்தியா நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி.20 போட்டி நாளை நடைபெற உள்ளது. விராட்கோலி...

    இந்திய அணியின் வெற்றி பயணம் தொடருமா..? நாளை இரண்டாவது டி.20 போட்டி !!

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் போட்டி தொடரில்...