இந்திய அணியில் இவரை எடுக்காததால் இந்த வீரரின் எதிர்காலமே வீனாப்போகும் நிலைமையில் உள்ளது; முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆதங்கம் !! 1இங்கிலாந்து அணியுடனான டி.20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள், ஐந்து டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இதுவரை 2 போட்டிகள் நிறைவடைந்துள்ளன. மூன்றாவது டெஸ்ட் போட்டி 24ம் தேதி துவங்கி 28ம் தேதியும், கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 4ம் தேதி துவங்கி 8ம் தேதியும் நிறைவடைய உள்ளது. இதன்பிறகு இரு அணிகள் இடையேயான ஐந்து டி.20 போட்டிகள் கொண்ட தொடர் துவங்க உள்ளது, இந்த தொடரின் முதல் போட்டி மார்ச் 12ம் தேதி அஹமதாபாத்தில் நடைபெற உள்ளது.

இந்தநிலையில், இங்கிலாந்து அணியுடனான டி.20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

இந்திய அணியில் இவரை எடுக்காததால் இந்த வீரரின் எதிர்காலமே வீனாப்போகும் நிலைமையில் உள்ளது; முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆதங்கம் !! 2

இந்த தொடருக்கான இந்திய அணியில் பலரும் ஆச்சரியப்படும் விதமாக சூர்யகுமார் யாதவிற்கு இடம் கிடைத்துள்ளது. அதே போல் தமிழகத்தை சேர்ந்த நடராஜன், வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கும், ஐபிஎல் தொடரில் மாஸ் காட்டிய ஆல் ரவுண்டர் ராகுல் டிவாட்டியாவிற்கும் இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

அதே போல் காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த புவனேஷ்வர் குமார் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். இந்திய அணியின் இரண்டாவது விக்கெட் கீப்பராக இளம் வீரர் இஷான் கிஷன் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதவரி வழக்கமான அனைத்து வீரர்களும் இங்கிலாந்து அணியுடனான டி.20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இந்திய அணியில் இவரை எடுக்காததால் இந்த வீரரின் எதிர்காலமே வீனாப்போகும் நிலைமையில் உள்ளது; முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆதங்கம் !! 3

இது பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கிரிக்கெட் வீரர் மற்றும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா கூறியதாவது ,சூர்யகுமார் யாதவ் இஷான் கிஷன் மற்றும் ராகுல் டிவாட்டியா போன்ற இளம் வீரர்கள் வீரர்கள் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளித்தாலும் இந்திய அணியின் லிமிடெட் ஓவர் போட்டிகளில் சிறப்பாக செயல்படக்கூடிய மணிஷ் பாண்டே அணியில் இல்லாமல் போனது மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று கூறினார்.

இந்திய அணியில் இவரை எடுக்காததால் இந்த வீரரின் எதிர்காலமே வீனாப்போகும் நிலைமையில் உள்ளது; முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆதங்கம் !! 4

மேலும் அவர் கூறியதாவது எப்பொழுதெல்லாம் டி20 போட்டி வருகிறதோ அப்பொழுதெல்லாம் மணிஷ் பாண்டேவின் பெயர் இடம் பெற்றிருக்கும் ஆனால் இந்தமுறை மணிஷ் பாண்டேவின் பெயர் இல்லாதது அவருடைய கிரிக்கெட் கேரியருக்கு மிகப்பெரும் ஆபத்தாக விளையக்கூடும் என்று கூறினார்.

மேலும் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த மணிஷ் பாண்டே சமீபமாக நடந்த சையது முஷ்டாக் அலி போட்டியில் விளையாடாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.டி.20 தொடருக்கான இந்திய அணி;

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கே.எல் ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன்( விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சாஹல், வருண் சக்கரவர்த்தி, அக்‌ஷர் பட்டேல், வாசிங்டன் சுந்தர், ராகுல் திவாடியா, நடராஜன், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், நவ்தீப் சைனி, ஷர்துல் தாகூர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *