இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் போட்டியில் கோப்பையை வென்றது கிடையாது, உலகின் தலைசிறந்த வீரர்கள் விராட் கோலி,ஏபி டிவில்லியர்ஸ் போன்ற வீரர்கள் இருந்தும் அந்த அணி ஒரு முறை கூட வெற்றி பெறாதது கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் ரசிகர்களிடத்தில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்னதான் உலகின் சக்ஸஸ்புள் கேப்டனாக திகழ்ந்தாலும் ஐபிஎல் போட்டியில் ஒரு முறை கூட வெற்றி கோப்பையை பெற்றுக் கொடுக்காதது விராட் கோலியின் மீது மிகப்பெரும் சுமையாகவே இருக்கிறது. இதனால் விராட் கோலி மற்றும் பெங்களூரு அணியை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்துக் கொண்டிருக்கின்றனர்.

பெங்களூர் அணியின் துவக்க வீரர்கள் யார் தெரியுமா !! புது பிளானுடன் களமிறங்கும் பெங்களூரு அணி !! 2

கடந்தாண்டு எப்படியாவது டைட்டில் பட்டத்தை வெற்றி பெற வேண்டும் என்று கனவுடன் களமிறங்கிய பெங்களூரு அணி மோசமான பந்து வீச்சால் அந்தக் கனவில் மண்ணள்ளிப் போட்டது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆரோன் பின்ச் , உமேஷ் யாதவ் மற்றும் டேல் ஸ்டைன் போன்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை.
இதனால் அந்த அணியின் முக்கிய வீரர்களாக இருந்த உமேஷ் யாதவ், மொயின் அலி மற்றும் ஆரோன் பின்ச் போன்ற நட்சத்திர வீரர்களை அந்த அணி விடுவித்தது,


2021 கான ஐபிஎல் போட்டியில் எப்படியாவது வெற்றி கோப்பையை பெற்று விட வேண்டும் என்ற முனைப்போடு காத்திருக்கும் அணி மிக சிறப்பான திட்டத்தை தீட்டி மிகச் சிறந்த வீரர்களை தங்களது அணியில் சேர்த்தது.


பல சிறந்த வீரர்களை தனது அணியில் சேர்த்து இருக்கும் பெங்களூர் அணி 2021 ஐபிஎல் போட்டியில் வெற்றி பெறுமா என்று கிரிக்கெட் வல்லுநர்கள் மட்டும் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர், இந்த ஐபிஎல் போட்டியிலும் ஆர்சிபி அணி சிறப்பாக செயல்படவில்லை என்றால் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு மிகப் பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூர் அணியின் துவக்க வீரர்கள் யார் தெரியுமா !! புது பிளானுடன் களமிறங்கும் பெங்களூரு அணி !! 3
கிளன் மேக்ஸ்வெல் 14.25 கோடி


கையில் ஜேம்சன் 15 கோடி


டேனியல் கிறிஸ்டின் 4.8 கோடி


முகமது அசாருதீன் 20 லட்சம்


சச்சின் பேபி 20 லட்சம்


சுயஸ் பிரபுதேசாய் 20 லட்சம்


கே எஸ் பரத் 20 லட்சம்

பெங்களூர் அணியின் துவக்க வீரர்கள் யார் தெரியுமா !! புது பிளானுடன் களமிறங்கும் பெங்களூரு அணி !! 4

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஆரோன் பின்ச் பெங்களூர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட அந்த அணியின் துவக்க வீரராக களம் இறங்குவார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் இந்த இரு வீரர்கள்தான் பெங்களூரு அணிக்கு துவக்க வீரர்களாக களம் இறங்கி சிறப்பாக செயல்படுவார்கள் என்று பேசப்படுகிறது.

ஒரு அணியின் துவக்கம் சிறப்பாக இருந்தால் அந்த அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இதனால் எந்த ஒரு ஆணையும் தனது துவக்க வீரர்களை தேர்ந்தெடுப்பதில் மிக கவனமாக இருப்பார்கள் அந்த வகையில் பெங்களூரு அணி தேவ்தாத் படிக்கள் மற்றும் ஜோஷ் பிலிப்பி ஆகிய இரு வீரர்களை தங்களது அணியின் துவக்க வீரர்களாக களம் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பெங்களூர் அணியின் துவக்க வீரர்கள் யார் தெரியுமா !! புது பிளானுடன் களமிறங்கும் பெங்களூரு அணி !! 5

இந்த இரு வீரர்களும் நிச்சயம் பெங்களூர் அணிக்கு ஒரு நல்ல துவக்கமாக அமைவார்கள் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.பல மாற்றங்களை செய்திருக்கும் பெங்களூரு அணி இந்த ஆண்டாவது கோப்பையை வெல்லுமா என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் அடித்துக் கொண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *