ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக இந்த இரு வீரர்கள் தான் இருப்பார்கள்; அடித்துச் சொல்லும் அனுபவ வீரர்கள்!! 1

2021 கான ஐபிஎல் போட்டி கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில் அந்த போட்டிக்கு தங்களது வீரர்களை அனைத்து அணிகளும் தயார்படுத்திக் கொண்டுள்ளனர் இந்நிலையில் பிப்ரவரி 18 இல் நடந்த இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் ஏலம் சென்னையில் சிறப்பாக நடைபெற்றது,இதில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவைப்படும் வீரர்களை மிகச் சிறப்பான முறையில் தேர்ந்தெடுத்தது.

கடந்த ஆண்டு சிறப்பாக செயல்படும் என்று எதிர்பார்த்த அணிகளின் முக்கியமான அணியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி திகழ்ந்தது, 2020 கானா ஐபிஎல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரான ஸ்டீவ் ஸ்மித் தலைமையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி செயல்பட்டது, ஆனால் கடந்த ஆண்டு ஸ்டீவ் ஸ்மித் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக செயல்படவில்லை, இவர் பேட்டிங்கிலும் கேப்டன்ஷிப்பிலும் மிக மோசமாக செயல்பட்டதன் காரணத்தால் கடந்த ஆண்டோடு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக இந்த இரு வீரர்கள் தான் இருப்பார்கள்; அடித்துச் சொல்லும் அனுபவ வீரர்கள்!! 2

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தவிர மற்ற யாரும் சிறப்பாக செயல்படவில்லை, மேலும் 2020 க்கான ஐபிஎல் போட்டியில் இந்திய அணியின் இளம் ஆல்ரவுண்டர் ராகுல் டிவாட்டியா மிகச் சிறப்பாக செயல்பட்டு அனைத்து ரசிகர்களிடமும் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்களிடமும் நற்பெயரை பெற்றார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஸ்மித் நீக்கப்பட்டதன்மூலம் அந்த அணியின் கேப்டனாக இந்திய அணியின் இளம் வீரரான சஞ்சு சாம்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக இந்த இரு வீரர்கள் தான் இருப்பார்கள்; அடித்துச் சொல்லும் அனுபவ வீரர்கள்!! 3

இந்நிலையில் 2021 காண ஐபிஎல் போட்டி எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்போடு களமிறங்கியிருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனக்குத் தேவைப்படும் வீரர்களை பிப்ரவரி 18இல் சென்னையில் நடந்த 2021 காண ஐபிஎல் போட்டியின் ஏலத்தில் எடுத்தது,

கிரிஸ் மோரிஸ் 16.25 கோடி

ஷிவம் துபே 4.40 கோடி

முஸ்தபிசுர் ரஹ்மான் 1 கோடி

சேட்டன் சக்கரியா 1.20 கோடி

லயாம் லிவிங்ஸ்டன் 75 லட்சம்

கே.சி கரியப்பா 20 லட்சம்

குல்டிப் யாதவ் 20 லட்சம்

ஆகாஷ் சிங் 20 லட்சம்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக இந்த இரு வீரர்கள் தான் இருப்பார்கள்; அடித்துச் சொல்லும் அனுபவ வீரர்கள்!! 4
இந்நிலையில் ராபின் உத்தப்பா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சென்னை அணிக்கு மாறியதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரர்கள் யார் என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த அணியின் அனுபவ வீரர்களான பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர்  ஆகிய இருவர்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக இருப்பார்கள் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர் ஏனென்றால் இவர்களுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் நல்ல ஒரு அனுபவம் உள்ளது மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பலம் மற்றும் பலவீனங்களை நன்கு அறிந்தவர்களாக இந்த இரு வீரர்களும் இருக்கிறார்கள் அதனால் நிச்சயம் இவர்கள் தான் தொடக்க வீரர்களாக தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்று தெரிவித்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *