இந்திய அணியுடன் சண்டை செய்ய காத்திருக்கும் ஆஸ்திரேலிய படை இது தான் !! 1

இந்திய அணியுடனான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியின் உத்தேச ஆடும் லெவன் குறித்து இங்கு பார்ப்போம்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இதில் முதலில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடருக்கான முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 374 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி சார்பில் அதிகபட்சமாக ஆரோன் பின்ச் 114 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 105 ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணியுடன் சண்டை செய்ய காத்திருக்கும் ஆஸ்திரேலிய படை இது தான் !! 2

இதனையடுத்து 375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு ஷிகர் தவான் 74 ரன்களும், ஹர்திக் பாண்டியா 90 ரன்களும் எடுத்து கைகொடுத்தாலும், விராட் கோஹ்லி, கே.எல் ராகுல் போன்ற சீனியர் வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டத்தின் மூலம் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.

இந்திய அணியுடன் சண்டை செய்ய காத்திருக்கும் ஆஸ்திரேலிய படை இது தான் !! 3

இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரையில் எந்த மாற்றமும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் அபார வெற்றி பெற்று தொடரை வெற்றியுடன் துவங்கியுள்ளதால் எந்த மாற்றமும் செய்யாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய அணியின் உத்தேச ஆடும் லெவன்;

டேவிட் வார்னர், ஆரோன் பின்ச், மார்னஸ் லபுசேன், ஸ்டீவன் ஸ்மித், கிளன் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, கேமிரான் க்ரீன், ஆடம் ஜாம்பா, பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் ஹசில்வுட்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *