தவான் அவுட்…. முதலில் பேட்டிங் செய்கிறது தென் ஆப்ரிக்கா

செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட்   அணி  முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் வெறும் 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இந்திய அணி, தனது மோசமான பேட்டிங் காரணமாக 72 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

LONDON, ENGLAND – JULY 27: Vernon Philander of South Africa during day one of the 3rd Investec test between England and South Africa at The Kia Oval on July 27, 2017 in London, England. (Photo by Visionhaus/Corbis via Getty Images)

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்ரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்றுள்ள தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி முதல் போட்டியை போல் இந்த போட்டியிலும் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

அதன் படி முதல் போட்டியில் சொதப்பிய துவக்க வீரர் தவானிற்கு பதிலாக கே.எல் ராகுல் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். அதே போல் விக்கெட் கீப்பர் சஹாவிற்கு பதிலாக பார்தீவ் பட்டேலும், புவனேஷ்வர் குமாருக்கு பதிலாக இஷாந்த் சர்மா  அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.

India’s captain Virat Kohli prepares for their training at Centurion Park in Pretoria, South Africa, Friday, Jan. 12, 2018, ahead of their second cricket test match against South Africa. (AP Photo/Themba Hadebe)

இதே போல் தென் ஆப்ரிக்கா அணியிலும் நிகிடி என்னும் இளம் வீரர் இன்றைய போட்டி மூலம் அறிமுக வீரராக களமிறங்குகிறார்.

இந்திய அணி;

விராத் கோஹ்லி, முரளி விஜய், லோகேஷ் ராகுல், புஜாரா, ரோஹித் சர்மா, பார்தீவ் பட்டேல், ஹர்திக் பாண்டியா, அஸ்வின், முகமது ஷமி, பும்ராஹ், இஷாந்த் சர்மா

தென் ஆப்ரிக்கா அணி;

டீன் எல்கர், எய்டன் மார்க்கம், ஹசீம் அம்லா, ஏ.பி. டிவில்லியர்ஸ், ஃபாஃப் டூ பிளசிஸ், குயிண்டன் டி. காக், பிலேண்டர், கேசவ் மஹராஜ், ரபாடா, நெகிடி, மோர்னே மார்க்கல்.

மைதானம் எப்படி;

இன்று போட்டி நடைபெறும் செஞ்சூரியன் மைதானம் வேகப்பந்து வீச்சிற்கு சாதகமானது என்று ஆடுகள பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழீ தீர்க்க இந்திய அணியும், தொடரை வெல்லும் முனைப்பில் தென் ஆப்ரிக்கா அணியும் இன்றைய போட்டியில் களம் காண உள்ளதால், இரண்டாவது போட்டியில் பரபரப்பிற்கு நிச்சயம்  பஞ்சம் இருக்காது. • SHARE

  விவரம் காண

  ஹைதராபாத் – பஞ்சாப் அணிகள் மோதல்!!! வெற்றிப்பெற போவது யார்? போட்டிக் கணிப்பு!!!

  எப்பொழுது : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – கிங்க்ஸ் லெவன் பஞ்சாப், ஏப்ரல் 26 இரவு 8 மணியளவில் எங்கே : இராஜீவ்காந்தி சர்வதேச மைதானம்,...

  ஹைதராபாத் – பஞ்சாப் அணிகள் மோதல்!!! சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தின் கணிக்கப்பட்ட அணி!!!

  ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்று (ஏப்ரல் 26) நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. ஹைதராபாத் அணி...

  ஹைதராபாத் – பஞ்சாப் அணிகள் மோதல்!!! கிங்க்ஸ் லெவன் பஞ்சாபின் கணிக்கப்பட்ட அணி!!!

  ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்று (ஏப்ரல் 26) நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் அணி...

  இது வின்டேஜ் தல…. கடைசி 7 ஓவருக்கு 100 ரன் சேசிங்!! தோனி, ராயுடுவை புகழந்து தள்ளும் ட்விட்டர் உலகம்!!

  பெங்களூரு: ஐபிஎல் தொடரின் 24-வது ஆட்டம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ்...

  மான்செஸ்டரில் நடக்கிறது இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போர்; முழு அட்டவணை உள்ளே !!

  மான்செஸ்டரில் நடக்கிறது இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போர்; முழு அட்டவணை உள்ளே அடுத்த ஆண்டு 50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரின் லீக்...