இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கலக்க காத்திருக்கும் 3 தமிழக வீரர்கள் ; ரசிகர்கள்  மகிழ்ச்சி ! 1

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், நடராஜன் ஆகிய மூன்று தமிழக வீரர்கள் இடம்பிடித்து இருக்கின்றனர். 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள், 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாடி வருகிறது. முதலில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கடந்த பிப்ரவரி 5-ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது.  இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றது.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கலக்க காத்திருக்கும் 3 தமிழக வீரர்கள் ; ரசிகர்கள்  மகிழ்ச்சி ! 2

இதில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் இருக்கின்றனர். இதையடுத்து நடைபெற இருக்கும் 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி  அகமதாபாத்தில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான “மோதிரா” மைதானத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர். இதில் 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடத்த திட்டமிட்டிருக்கின்றனர். 

3ஆவது டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இரு அணிகளும் தலா ஒவ்வொரு வெற்றிகளைப் பெற்று சமநிலையில் இருப்பதால் 3வது டெஸ்ட் போட்டியை வென்று முன்னிலை வகிப்பதற்கு இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து 4-வது டெஸ்ட் போட்டி மார்ச் 4 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கலக்க காத்திருக்கும் 3 தமிழக வீரர்கள் ; ரசிகர்கள்  மகிழ்ச்சி ! 3

இந்த 4 டெஸ்ட் தொடரும் முடிவடைந்த பிறகு இங்கிலாந்து மற்றும் இந்திய அணி 5 டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த 5 டி20 தொடரும் அதே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இதற்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் தமிழக வீரர்களான வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர், நடராஜன்  இடம் பெற்றிருக்கின்றனர்.

ஆஸ்திரேலியா தொடரை கலக்கிய வாசிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் மீண்டும் அணியில் இடம்பெற்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் மீண்டும் உற்சாகத்தை ஏற்பட்டிருக்கிறது. காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரில் இருந்து விலகிய மற்றொரு தமிழக வீரர் வரும் சக்கரவர்த்தி மீண்டும் இந்திய அணியில் இடம் பெற்றிருப்பதையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவர்களைத் தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் இஷான் கிசான் ராகுல் ஆகியோர்  முதன் முறையாக சர்வதேச அணியில் இடம் பெற்றிருக்கின்றனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கலக்க காத்திருக்கும் 3 தமிழக வீரர்கள் ; ரசிகர்கள்  மகிழ்ச்சி ! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *