ஒரே டீம்ல மூன்று விக்கெட் கீப்பர்... ஆனா இந்த பையனுக்கு மட்டும் இடம் கொடுக்க மாட்டீங்களா..? இந்திய அணி மீது ரசிகர்கள் அதிருப்தி !! 1

ஜிம்பாப்வே அணியுடனான முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ராகுல் த்ரிபாட்டி புறக்கணிப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

ஒரே டீம்ல மூன்று விக்கெட் கீப்பர்... ஆனா இந்த பையனுக்கு மட்டும் இடம் கொடுக்க மாட்டீங்களா..? இந்திய அணி மீது ரசிகர்கள் அதிருப்தி !! 2

இந்த தொடரின் முதல் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. ஜிம்பாப்வேவின் ஹராரே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு அந்த அணியின் துவக்க வீரர்களான கையா 4 ரன்னிலும், மருமானி 8 ரன்னிலும் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றம் கொடுத்தனர்.

ஒரே டீம்ல மூன்று விக்கெட் கீப்பர்... ஆனா இந்த பையனுக்கு மட்டும் இடம் கொடுக்க மாட்டீங்களா..? இந்திய அணி மீது ரசிகர்கள் அதிருப்தி !! 3

அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களில் சகப்வா (34) மற்றும் பிராட் எவன்ஸ் (33*) ஆகிய இருவரை தவிர மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் 40.3 ஓவரில் வெறும் 189 ரன்கள் மட்டுமே எடுத்த ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக தீபக் சாஹர், அக்‌ஷர் பட்டேல் மற்றும் பிரசீத் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ஒரே டீம்ல மூன்று விக்கெட் கீப்பர்... ஆனா இந்த பையனுக்கு மட்டும் இடம் கொடுக்க மாட்டீங்களா..? இந்திய அணி மீது ரசிகர்கள் அதிருப்தி !! 4

இந்தநிலையில், இந்த போட்டிக்கான இந்திய அணியில் இருந்து காரணமே இல்லாமல் ராகுல் த்ரிபாட்டி புறக்கணிப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சு சாம்சன், கே.எல் ராகுல், இஷான் கிஷன் என மூன்று விக்கெட் கீப்பர்களுக்கு ஆடும் லெவனில் இடம் கொடுத்துள்ளது ஏன் எனவும், தொடர்ந்து மிக சிறப்பாக விளையாடி வரும் போதிலும் ராகுல் த்ரிபாட்டியை தொடர்ந்து புறக்கணிப்பது ஏன் எனவும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதில் சில;

 

 

Leave a comment

Your email address will not be published.