இந்தியா அபாரா வெற்றியா அல்லது ஆறுதல் வெற்றியா... 1

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி.20 போட்டிகள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்தியா அபாரா வெற்றியா அல்லது ஆறுதல் வெற்றியா... 2

இதில் முதலில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து, தொடரையும் இழந்துவிட்ட நிலையில் இரு அணிகள் இடையேயான அதிக முக்கியத்துவம் இல்லாத கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.

ஆஸ்திரேலியாவின் ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

துவக்க வீரராக களமிறங்கிய தவான் மற்றும் சுப்மன் கில் ஜோடி எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்கள் பின் களமிறங்கிய விராட் கோலி 78 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அணிக்கு ரன்களை சேர்த்தார்.எதிர்பாராதவிதமாக ஹஸல்வுட் வீசிய பந்தில் கேட்ச் என்ற முறையில் அவுட்டானார்.

இந்தியா அபாரா வெற்றியா அல்லது ஆறுதல் வெற்றியா... 3

பின் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே எல் ராகுல் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இந்தியா அபாரா வெற்றியா அல்லது ஆறுதல் வெற்றியா... 4

பின் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரின் ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது இதில் ஹர்திக் பாண்டியா 76 பந்துகளில் 92 ரன்களை அடித்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை இருந்தார் அதேபோன்று ரவீந்திர ஜடேஜா 50 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்நிலையில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் எடுத்தது.

303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் ஓபனரான மார்னஸ் மற்றும் ஆரோன் பின்ச் துவக்க வீரராக களம் இறங்கினார்.

இந்தியா அபாரா வெற்றியா அல்லது ஆறுதல் வெற்றியா... 5

நடராஜன் வீசிய பந்தில் 7 ரன்கள் எடுத்த நிலையில் மார்னஸ் அவுட் ஆனார் இதன் மூலம் நடராஜன் சர்வதேச போட்டிகளில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்தார். அடுத்து வந்த ஸ்மித்,ஹென்ரிக்ஸ் போன்ற பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் நிதானமாக ஆடிய ஆரோன் பின்ச் 82 பந்துகளில் 65 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா வீசிய பந்தில் கேட்ச் முறையில் அவுட்டானார்.

இந்தியா அபாரா வெற்றியா அல்லது ஆறுதல் வெற்றியா... 6

அடுத்ததாக அலெக்ஸ் கேரி மற்றும் கிளன் மேக்ஸ்வெல் ஆகிய இருவரின் பார்ட்னர்ஷிப் மிக சிறப்பாக இருந்தது கிளென் மேக்ஸ்வெல் மிகச் சிறப்பாக செயல்பட்டு 38 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார் பின் பும்ராவிடம் போல்ட் என்ற முறையில் அவுட்டானார்.

இந்தியா அபாரா வெற்றியா அல்லது ஆறுதல் வெற்றியா... 7

அடுத்ததாக அலெக்ஸ் கேரி ரன் அவுட் முறையில் தனது விக்கெட்டை இழந்தார் பின் அடுத்து வந்த அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் தனது விக்கெட்டை இழந்தனர்.

இதன் மூலம் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி சார்பில் சர்தார் தாக்கூர் 3 விக்கெட்டும் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் நடராஜன் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டும் குல்தீப் யாதவ் ரவீந்திர ஜடேஜா இருவரும் ஒவ்வொரு விக்கெட்டும் எடுத்தனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *