பயமுறுத்தும் ஆடுகளம்… ரஹானே – புவனேஷ்வர் குமார் நிதான ஆட்டம் !! 1
பயமுறுத்தும் ஆடுகளம்… ரஹானே – புவனேஷ்வர் குமார் நிதான ஆட்டம்

தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இன்றைய மூன்றாம் நாள் தேநீர் இடைவேளை வரை 6 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 199 ரன்கள் எடுத்துள்ளது.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்து 2-0 என்ற கணக்கில் தொடரை இழந்துள்ள நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தென் ஆப்ரிக்காவின் ஜோகன்ஸ்பெர்கில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணிக்கு,  கேப்டன் கோஹ்லி 54 ரன்களூம், புஜாரா 50 ரன்களும், புவனேஷ்வர் குமார் 30 ரன்களும் எடுத்து கைகொடுத்தாலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியதால் தனது முதல் இன்னிங்ஸில் 187 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பயமுறுத்தும் ஆடுகளம்… ரஹானே – புவனேஷ்வர் குமார் நிதான ஆட்டம் !! 2

இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய தென் ஆப்ரிக்கா அணிக்கு ஆம்லா 61 ரன்கள் எடுத்து கைகொடுத்ததன் மூலம் தென் ஆப்ரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக பும்ராஹ் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கிய பார்தீவ் பட்டேல் 16 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தார். இதன் மூலம் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 1 விக்கெட்டை இழந்த இந்திய அணி 49 ரன்கள் எடுத்திருந்தது.

பயமுறுத்தும் ஆடுகளம்… ரஹானே – புவனேஷ்வர் குமார் நிதான ஆட்டம் !! 3

மூன்றாம் நாளான இன்றைய நாள் ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில், கே.எல் ராகுல் 16 ரன்னிலும், புஜாரா 1 ரன்னிலும் விக்கெட்டை இழந்து வெளியேறினர். சிறிது நேரம் தாக்குபிடித்த மற்றொரு துவக்க வீரரான முரளி விஜய்யும் 127 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த போது விக்கெட்டை இழந்தார். அதன் பின் கோஹ்லியும் 41 ரன்களிலும் ஹர்திக் பாண்டியா 4 ரன்னிலும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினர்.

இதனையடுத்து ஜோடி சேர்ந்த ரஹானே – புவனேஷ்வர் குமார் கூட்டணி, தென் ஆப்ரிக்காவின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு சீரான இடைவேளையில் பவுண்டரிகள் அடித்து பொறுமையாக ரன் சேர்த்து வருகிறது.

பயமுறுத்தும் ஆடுகளம்… ரஹானே – புவனேஷ்வர் குமார் நிதான ஆட்டம் !! 4

இதன் மூலம் போட்டியின் மூன்றாம் நாளான இன்றைய தேநீர் இடைவேளை வரை 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்துள்ள இந்திய அணி, 192 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகள் இடையேயான இந்த போட்டி நடைபெற்று வரும் ஜோகன்ஸ்பெர்க் ஆடுகளம், மிக மோசமாக இருப்பதால் பந்து எக்கு தப்பாக மைதானத்தில் எகிறி வருகிறது. இது குறித்து அம்பயர்களும் ஆய்வு செய்தனர்.

Leave a comment

Your email address will not be published.