இந்திய இலங்கை டெஸ்ட் : முதல் நாள் நிலைமை 1
Sri Lanka's Lakshan Sandakan, right, celebrates the dismissal of India's captain Virat Kohli during the first day's play of their third cricket test match in Pallekele, Sri Lanka, Saturday, Aug. 12, 2017. (AP Photo/Eranga Jayawardena)

இந்தியா இலங்கை இடையேயான 3வது டெஸ்ட் போட்டி பல்லகெலே மைதானத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோலி பேட்டிங் தேர்வு செய்தார்.

இந்திய அணி : பேட்டிங் (டாஸ்)

விராட் கோலி (கேப்டன்),கே எல்  ராகுல்,அஜிங்க்யா ரகானே, ஹர்திக் பாண்ட்யா, சிகர் தவான்,சட்டேஷ்வர் புஜாரா,வ்ரித்திமான் சகா,ரவிச்சந்திரன்  அஷ்வின்,முகமது ஷமி, உமேஷ் யாதவ், குல்தீப் யாதவ்,

இலங்கை அணி :

லஷ்கன் சன்டகன்,லகிரு குமாரா, பெர்னான்டோ,திமுத் கருணாரத்னே,உபுல் தரங்கா, தினேஷ் சண்டிமால் (கேப்டன்) ,ஆஞ்சலோ மேத்யூஸ், குசல் மெண்டிஸ், தில்ருவன் பெரேரா, மலின்டா புஸ்பகுமாரா,நிரோசன் டிக்வெல்லா

 

 

ஓப்பனிங் :

தொடக்க வீரர்களாக களம் இறங்கிய சிகர் தவானும் லோகேஷ் ராகுலும்  அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தனர். இலங்கை அணி ஃபீல்டிங்கில் இன்று காலை முதல் மிக மோசமாக செயல் பட்டுவருகிறது. சிகர் தவான் மற்றும் லோகேஸ் ராகுல் என இருவருக்கும் ஒரு கேட்ச் விட்டு அவர்களுக்கு மேலும் ஆட வாய்ப்பளித்தது.

இந்திய இலங்கை டெஸ்ட் : முதல் நாள் நிலைமை 2
India’s Shikhar Dhawan, right, and Lokesh Rahul run between the wickets during the first day’s play of their third cricket test match against Sri Lanka in Pallekele, Sri Lanka, Saturday, Aug. 12, 2017. (AP Photo/Eranga Jayawardena)

அதிரடியாக ஆடிய சிகர் தவான் 47 பந்துகளில் மிகவேகமாக அரைசதம் கடந்தார். இதில் ஏழு பவுன்டரிகள் அடங்கும். நிதானமாக ஆடிய லோகேஸ் ராகுல் 65 பந்துகளில் அரைசதம் கடந்தார்.உணவு இடைவேளையின் போது இந்தியா 27 ஒவெர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 134 ரன்களை குவித்துள்ளது. ஒவருக்கு கிட்டத்தட்ட 5 ரன்கள் வீதம் அடித்து அதிரடியாக ஆடி வந்தது இந்திய அணி.

ராகுல் :

உணவு இடைவேளைக்குப் பின் நிதானமாக ஆட்டத்தை தொடர்ந்த ராகுலும் தவானும் தொடக்க முதலே சிறிது திணறினர்.

இந்திய இலங்கை டெஸ்ட் : முதல் நாள் நிலைமை 3
India’s Lokesh Rahul reacts as he leaves the ground after losing his wicket during the first day’s play of their third cricket test match against Sri Lanka in Pallekele, Sri Lanka, Saturday, Aug. 12, 2017. (AP Photo/Eranga Jayawardena)

உணவு இடைவேளைக்கு முன் ராகுல் 67 அடித்திருந்த ராகுல் அதிரடியாக ஆட நினைத்து இடது கை சுழற் பந்து வீச்சாளரான மலிண்டா புஷ்பாகுமாரா வீசிய 39 வது ஓவரின் மூன்றாவது பந்தை இறங்கி வந்து தூக்கி அடிக்க நினைத்த ராகுல் சிறிது மிஸ்டைம் செய்து விட அந்த பந்து நேராக மிட் ஆனில் நின்றிருந்த  திமுத் கருனாரத்னேவிடம் செண்றது. அதை லாவகமாக பிடித்தார் அவர். 135 பந்துகளுக்கு 85 ரன்கள் அடித்திருந்த நிலையில் தனது விக்கெட்டை தானாக் இழந்தார் ராகுல்.

தவான் :

இந்திய இலங்கை டெஸ்ட் : முதல் நாள் நிலைமை 4
India’s Shikhar Dhawan gestures towards team’s dressing room as he celebrates scoring a century during the first day’s play of their third cricket test match against Sri Lanka in Pallekele, Sri Lanka, Saturday, Aug. 12, 2017. (AP Photo/Eranga Jayawardena)

பின்னர் 123 பந்துகளுக்கு 119 ரன்கள் அடித்திருந்த போது இவரும் மலின்டா ப்புஷ்பாகுமாரா பந்தில் சண்டிமாலிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை இழந்தார். சண்டிமால் பிடித்த இந்த கேட்ச் மிகவும் அற்புதமானது.

 புஜாரா :

அவரை தொடர்ந்து வந்த கட்டை மன்னன் புஜாராவும் பெரிதும் சோபிக்கவில்லை. சண்டக்கான் பந்தில் 1ஸ்ட் ஸ்லிப்பில் எட்ஜ் செய்து தனது விக்கெட்டை இழந்தார் புஜாரா.

 ரஹானே:

தேநீர் இடைவேளைக்கு பின்னர் நிதானமாக ஆடத் துவங்கிய ரஹானே மற்றும் கேப்டன் கோலி ஆகியோர் ஓரளவிற்க்கு தாக்கு பிடித்தனர். மலிண்டா புஷ்பகுமாரவின் பந்தை இறங்கி அடிக்க முற்ப்பட்ட ரஹானே பந்தை விட அது அவரது ஸ்டெம்பை பதம் பார்த்தது. ரஹானே தனது விக்கெட்டை இழந்த போது இந்திய ஓரளவிலான நல்ல நிலையில் இருந்தது. இந்திய அணியின் அப்போதய நிலை 264-4. ரகானே 17(48)

விராட் கோலி :

அதன்பின் மிகவும் நிதானித்து ஆடிய கேப்டன் விராட் கோலி ஓரளவிற்க்கு சோபித்தார். தனது பங்கிற்கு ஆடிய கோலி 84 பந்துகளில் 44 ரன்கள் அடித்தார். 5 விக்கெட்கள் இழந்த நிலையில் இந்தியா 296 ரன்களை சேர்த்திருந்தது.

அஸ்வின் :

அடுத்து வந்த அஸ்வின் 75 பந்துகளுக்கு 31 ரன் அடித்து  ஓரளவிற்க்கு கை கொடுக்க இந்திய அணி 322 ரன்களை குவித்தது. அஸ்வின் தனது விக்கெட்டை இழக்கும் போது 2 ஓவர்களே மீதம் இருந்தது.

இந்திய இலங்கை டெஸ்ட் : முதல் நாள் நிலைமை 5
Sri Lanka’s Lakshan Sandakan, right, celebrates the dismissal of India’s captain Virat Kohli during the first day’s play of their third cricket test match in Pallekele, Sri Lanka, Saturday, Aug. 12, 2017. (AP Photo/Eranga Jayawardena)

இலங்கையின் தரப்பில் இடது கை சுழற் பந்து வீச்சாளர் மலிண்டா புஷ்பகுமாரா 3 விக்கெட்டுகளையும், இடது கை சைனாமேன் பந்து வீச்சாளர் லஷ்கன் சண்டகான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். வேகப்பந்து வீச்சாளர் விஸ்வா பெர்னாண்டோ 1 விக்கெட்டியயும் வீழ்த்தினார். இன்றைய நாள் முடிவில் இந்திய 329 ரன்கள் குவித்து 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *