"45 நிமிடத்தில் கோப்பையை இழந்தோம்" - வேதனையுடன் பேட்டியளித்த விராத் கோலி 1

அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவிய பிறகு பத்திரிக்கையாளர்களுக்கு கோலி பேட்டியளித்தார். அதில் தோல்வி குறித்தும் பதிலளித்தார்.

இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதியில் நியூஸிலாந்து அணியிடம் இந்தியா இறுதிவரை போராடி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து உலகக்கோப்பை தொடரில் இருந்தும் வெளியேறியது.

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மூவரும் தலா 1 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். 5 ரன்களுக்கு 3 விக்கெட், 24 ரன்களுக்கு 4 விக்கெட், பிறகு 92/6 என்று இந்திய அணி சரிவு கண்டது.

"45 நிமிடத்தில் கோப்பையை இழந்தோம்" - வேதனையுடன் பேட்டியளித்த விராத் கோலி 2

தோனி, ஜடேஜா இருவரும் ஜோடி சேர்ந்து 92/6 என்ற தோல்வியின் பிடியிலிருந்து வெளியேற்றி 208 வரை ஸ்கோரை உயர்த்தி வெற்றிக்குஅருகாமையில் எடுத்து சென்றனர். ஆனால் தேவைப்படும் ரன் விகிதம் அதிகமாக,  ஜடேஜா அடிக்க முயற்சித்து 77 ரன்களில் வெளியேற பிறகு தோனியும் 50 ரன்களில் ரன் அவுட் ஆனது இந்திய அணியின் தோல்வியை உறுதி செய்தது. இறுதியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியை தழுவியது.

இந்நிலையில் ஆட்டம் முடிந்து விராட் கோலி பேட்டியளிக்கையில், “மிகவும் கடினமே. முதல் 45 நிமிட மோசமான கிரிக்கெட் ஆட்டத்தினால் தொடரிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனை எங்களால் இன்னமும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நியூஸிலாந்து வெற்றிக்குத் தகுதியான அணி. எங்களை அவர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கி, முக்கியத் தருணங்களிலும் நன்றாக செயல்பட்டனர்.

"45 நிமிடத்தில் கோப்பையை இழந்தோம்" - வேதனையுடன் பேட்டியளித்த விராத் கோலி 3

நம் ஷாட் தேர்வு இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்க வேண்டும். மற்றபடி தொடர் முழுவதும் நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினோம், நாம் விளையாடிய விதம் குறித்து பெருமையே அடைகிறேன்.

நாக் அவுட் சுற்று எனில் அதில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். நியூஸிலாந்து அணி நல்ல அமைதியுடன் திட்டமிட்டு ஆடினர். அவர்கள் தைரியமாக ஆடினர், இறுதிப்போட்டிக்குச் செல்ல அந்த அணிக்குத்தான் தகுதி இருக்கிறது.

"45 நிமிடத்தில் கோப்பையை இழந்தோம்" - வேதனையுடன் பேட்டியளித்த விராத் கோலி 4

ஜடேஜா இன்று அபாரமாக ஆடினார், தோனி அவருடன் சேர்ந்து நன்றாக பார்ட்னெர்ஷிப் அமைத்தார். இருவரும் அடுத்தது ஆட்டமிழந்தது ஏமாற்றம். குறிப்பாக, தோனி ரன் அவுட் ஆகியது ஜீரணிக்க முடியவில்லை.

இவ்வாறு கூறினார் விராட் கோலி.

.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *