Cricket, India, New Zealand, Virat Kohli, Ajinkya Rahane, KL Rahul

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. உலகம் முழுவதும் அவருக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கின்றனர். பல திரைப் பிரபலங்கள் பல விளையாட்டு உலகின் பிரபலங்கள் என அவரது ஆட்டத்திர்கு அசராத ஆட்களே இல்லை எனலாம்.

அவருக்கு பெண் ரசிகர்கள் அளவில்லாமல் இருக்கின்றனர். அது தவிர பெண் கிரிக்கெட் வீராங்கணைகளும் இவரது ஆட்டத்திறமைக்கு ரசிகர்களாக இருக்கின்றனர்.

தற்போது அப்படி கிரிக்கெட் வீராங்கணைகள் விராட் கோலிக்கு ரசிகர்களாக இருக்கும் 4 பேரைப் பார்ப்போம்.

1.சாரா டெய்லர்

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் வீராங்கணை சாரா டெய்லர். இவர் விக்கெட் கீப்பர் ஆவார். இவர் இங்கிலந்து பெண்கள் அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார். கடந்த ஆண்டு ட்விட்டர் தளத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு அவர் அளித்த பதில், சாரா டெய்லர் விராட் கோலியின் ரசிகர் தான் என்பது தெரியவந்துள்ளது.

விராட் கோலியின் பெண் கிரிக்கெட் வீராங்கணை ரசிகர்கள் 1

அந்த ட்விட்டர் உரையாடல் கீழே :

2.கேட் க்ராஸ்

விராட் கோலியின் பெண் கிரிக்கெட் வீராங்கணை ரசிகர்கள் 2

இங்கிலாந்து மகளிர் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். கடந்த 2011ஆம் ஆண்டு பெங்களூரில் நடந்த ஐ.பி.எல் போட்டியின் போது கேட் க்ராஸ் விராட் கோலியின் அபாரா ஆட்டத்தைப் பார்த்து அவரத் ரசிகை ஆகியுள்ளார்.

3.டேனியல்லா வியாட்

விராட் கோலியின் பெண் கிரிக்கெட் வீராங்கணை ரசிகர்கள் 3

சொல்லப்போனால் இவர் தான் விராட் கோலியின் மிகப் பெரிய அபிமானியாவார். இவர் இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஆவார். கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த டி20 கிரிக்கெட் உலககோப்பையின் போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக விராட் கோலி அதிரடியாக சதம் அடித்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.

இந்த அதிரடி ஆட்டத்தால் ஈர்க்கப்பட்டு அவரது ரசிகை ஆனார் டேனியல்ல வியாட். மேலும், அவர் உராட் கொலை என்னைக் கல்யாணம் செயது கொள் ட்வீட்டரில் தூது விட்டார். அந்த அளவிற்கு கோலியின் ரசிகை ஆகியுள்ளார்.

4.கேத்திரின் ப்ரூண்ட்

விராட் கோலியின் பெண் கிரிக்கெட் வீராங்கணை ரசிகர்கள் 4
during the ICC Women’s World Twenty20 2012 Group A match between Australia and England at Galle International Stadium on October 1, 2012 in Galle, Sri Lanka.

இந்த இங்கிலாந்து பெண் கிரிக்கெட் வீராங்கனை விராட் கோழி ரசிகையின் மீது இவருக்கு பொறாமை போலும். டேனியல்லா வியாட் கோலியை என்னைத் திருமணம் செயது கொள்கிறாய் எனக் கேட்ட போது கேத்திரின் ப்ரூண்ட் அதே ட்வீட்டர் பதிவில் வந்து ‘நீங்கள் ரொம்ப லேட், விராட் கோலி என்னிடம் ஏற்க்கனவே கேட்டுவிட்டார்’ எனக் கூறி தானும் விராட் கோலியின் ரசிகை தான் என நிரூபித்துள்ளார்.

https://twitter.com/KBrunt26/status/452539546593677312

India, Cricket, Sri Lanka, Virat Kohli, Sourav Ganguly

விராட் கோலி இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராக முடியும் என முன்னாள் இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

இந்திய அணியின் முன்னணி கேப்டனாக திகழ்ந்தவர்களில் ஒருவர் சவுரவ் கங்குலி. இவரது தலைமையிலான இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணி 2003-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. வெளிநாட்டு மண்ணில் இந்திய அணி அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தியது இவரது காலத்தில்தான். ஏராளமான இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்தவர். தற்போது மேற்கு வங்காள கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கிறார்.

இந்தியாவிற்கு மூன்று உலகக்கோப்பைகளை வாங்கிக் கொடுத்த டோனிக்குப்பிறகு, தற்போது விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். பல்வேறு வெற்றிகளை இந்திய அணிக்கு தேடிக்கொடுத்துள்ள விராட் கோலியால், தலைசிறந்த இந்திய கேப்டன்களில் ஒருவராக ஆக முடியும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘இந்தியாவின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவராகும் தகுதியை விராட் கோலி பெற்றுள்ளார். அதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. இந்திய அணிக்கு அடுத்த 15 மாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த காலக்கட்டத்தில் இந்தியா தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்கிறது. உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது.

அவர் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறார். அணியை தயார் செய்து கொண்டிருக்கிறார். வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி வருகிறார். இந்திய அணி நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளை வீழ்த்தும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. தென்ஆப்பிரிக்கா செல்லும்போது இந்திய அணி சவால்களை சந்திக்கும். ஆனால், தென்ஆப்பிரிக்கா மண்ணில் தற்போதைய இந்திய அணி சிறப்பாக செயல்படும்’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *