பிரிஸ்பேன் டெஸ்ட் : 3வது நாள் முடிவில் இந்திய அணி 336 ரன்கள் குவிப்பு ! 54 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா ! 1

பிரிஸ்பேன் டெஸ்ட் : 3வது நாள் முடிவில் இந்திய அணி 336 ரன்கள் குவிப்பு ! 54 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா ! 

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டி ஜனவரி 15ம் தேதியிலிருந்து பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மூன்றாவது டெஸ்டில் இந்திய வீரர்கள் ஜடேஜா, பும்ரா, அஸ்வின் மற்றும் விஹாரி ஆகியோர் காயமடைந்ததால் தற்போது நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் மற்றும் மயங்க் அகர்வால் நான்காவது டெஸ்ட் அணியில் இடம்பெற்று சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

பிரிஸ்பேன் டெஸ்ட் : 3வது நாள் முடிவில் இந்திய அணி 336 ரன்கள் குவிப்பு ! 54 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா ! 2

இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் பேட் செய்தது. முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட்களை இழந்து 274 ரன்கள் குவித்தது. இதையடுத்து இரண்டாவது நாளில் ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்களை இழந்து 369 ரன்கள் குவித்துள்ளனர். இதில் லபுசாக்னே 108, பெய்ன் 50, கிரீன் 47 மற்றும் வேட் 45  ரன்கள் குவித்துள்ளனர். இதையடுத்து இந்திய அணி தனது முதல் இன்னிஸ்சில் 2 விக்கெட்களை இழந்து 62 ரன்கள் குவித்துள்ளார்கள்.

பிரிஸ்பேன் டெஸ்ட் : 3வது நாள் முடிவில் இந்திய அணி 336 ரன்கள் குவிப்பு ! 54 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா ! 3

இதில் ரோகித் சர்மா 44 மற்றும் சுப்மன் கில் 7 ரன்கள் குவித்துள்ளார்கள். ஆனால் இரண்டாவது நாள் உணவு இடைவெளிக்கு பின்பு கனமழை காரணமாக இரண்டாவது நாள் போட்டி முழுவதும் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மூன்றாவது நாள் போட்டியில் இந்திய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் தங்களது விக்கெட்டை இழக்க தொடங்கினர். இதில் புஜாரா 25 , பண்ட் 23 , மயங்க் அகர்வால் 38 மற்றும் ரஹானே 37 ரன்கள் மட்டும் எடுத்துள்ளனர்.

பிரிஸ்பேன் டெஸ்ட் : 3வது நாள் முடிவில் இந்திய அணி 336 ரன்கள் குவிப்பு ! 54 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா ! 4

இதன்பின் ஜோடி சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் நிதானமாக விளையாடி பாட்னர்சிப்பில் 123 ரன்கள் குவித்தனர். சிறப்பாக விளையாடி வந்த இவர்களது ஜோடியை பாட் கம்மின்ஸ் பிரித்தார். பாட் கம்மின்ஸ் வீசிய பந்தில் ஷர்துல் தாகூர் 67 ரன்களுடன் போல்ட்டில் விக்கெட் இழந்தார். இதையடுத்து வாஷிங்டன் சுந்தருடன் ஜோடி சேர்ந்து விளையாட யாரும் இல்லததால் சுந்தரும் 62 ரன்களுடன் வெளியேறினார்.

இறுதியில் இந்திய அணி 111.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 336 ரன்கள் மட்டுமே குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி மூன்றாவது நாள் முடிவில் 6 ஓவர்கள் மட்டும் பேட் செய்து 21 ரன்கள் குவித்தது. இதில் வார்னர் 20 ரன்களும் ஹாரிஸ் 1 ரன்னும் குவித்து ஆட்டமிழக்காமல் இருக்கின்றனர். 

பிரிஸ்பேன் டெஸ்ட் : 3வது நாள் முடிவில் இந்திய அணி 336 ரன்கள் குவிப்பு ! 54 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா ! 5

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *