இதுக்கு மேல முடியாது; டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டிக்கு பிறகு விடைபெற காத்திருக்கும் ஐந்து முக்கிய வீரர்கள் !! 1

ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்து மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையில் நடைபெற உள்ளது, எதிர்பாராதவிதமாக கொரோனா அச்சத்தின் காரணமாக ஐபிஎல் போட்டி பாதியிலேயே கைவிடப்பட்டது, இந்நிலையில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தே தீரவேண்டும் என்று ஐசிசி மற்றும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இதன்காரணமாக தகுந்த முன்னேற்பாடுகளுடன் பல திட்டங்களைத் தீட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு இந்திய அணியில் இருந்து 5 வீரர்கள் தங்களது ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹனுமா விஹாரி.

நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணிக்காக பங்குபெற இருக்கும் ஹனுமா விஹாரி டெஸ்ட் போட்டியின் ஸ்பெஷலிஸ்ட் என்று கூறும் அளவிற்கு மிகச்சிறந்த வீரராக,இவர் டெஸ்ட் போட்டிகளில் மிக சிறப்பாக செயல்பட்டு இந்திய அணியை பலமுறை வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார்.

இதுக்கு மேல முடியாது; டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டிக்கு பிறகு விடைபெற காத்திருக்கும் ஐந்து முக்கிய வீரர்கள் !! 2

இருந்த போதும் இவர் 2020-21 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற இவர் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை அந்த போட்டியில் பங்குபெற்று இவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை குறிப்பாக அந்த போட்டியில் அதிகபட்சமாக 23 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார் இதன் காரணமாக அடுத்து நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட இவருக்கு நியூசிலாந்துக்கு எதிரான போட்டி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் இவர் இந்தப் போட்டிக்குப் பிறகு தனது ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கே எல் ராகுல்

இதுக்கு மேல முடியாது; டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டிக்கு பிறகு விடைபெற காத்திருக்கும் ஐந்து முக்கிய வீரர்கள் !! 3

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ராஜாவாக திகழும் கேஎல் ராகுல் சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை,இவர் தனது திறமையை நிரூபிப்பார் என்று இந்திய அணி இவருக்கு பல முறை வாய்ப்பு அளித்தும், கே எல் ராகுல் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை இதன் காரணமாக ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து கே எல் ராகுல் கைவிடப்பட்டார், மேலும் பல இளம் வீரர்கள் தங்களது திறமைகளை மிக சிறப்பாக வெளிப்படுத்தி வருவதன் காரணமாக கேஎல் ராகுல் டெஸ்ட் போட்டியில் இருந்து தனது இடத்தை பறி கொடுத்து விடுவார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் பலரும் தெரிவிக்கின்றனர் இந்நிலையில் இவர் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு பிறகு தனது ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷர்துல் தாகூர்.

2018 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்காக டெஸ்ட் தொடரில் களமிறங்கிய ஷர்துல் தாகூர் ஒரு விக்கெட் கூட கைப்பற்றவில்லை இதன் காரணமாக இவர் டெஸ்ட் போட்டியில் இருந்து புறக்கணிக்கப்பட்ட இவர் மொத்தமாக மூன்று ஆண்டுகளில் இரண்டே இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றுள்ளார்.

இதுக்கு மேல முடியாது; டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டிக்கு பிறகு விடைபெற காத்திருக்கும் ஐந்து முக்கிய வீரர்கள் !! 4

டி20 போட்டிகளில் மிக சிறப்பாக பந்து வீசினாலும் இவர் ரன்களை வாரி வழங்குகிறார் என்று கிரிக்கெட் வல்லுனர்களால் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். மேலும் இவர் டெஸ்ட் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்காததால் இவரை இந்திய அணி தேர்வாளர்கள் புறக்கணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதனால் இவர் நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிறகு தனது ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உமேஷ் யாதவ்

இதுக்கு மேல முடியாது; டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டிக்கு பிறகு விடைபெற காத்திருக்கும் ஐந்து முக்கிய வீரர்கள் !! 5

பல முன்னணி வீரர்களின் விக்கெட்களை வீழ்த்தி பல சாதனைகளைப் படைத்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் சமீபகாலமாக சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை,மேலும் கடைசியாக இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்று முதல் போட்டியில் 3 விக்கெட்டும் இரண்டாவது போட்டியில் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றினர் இதன் காரணமாக இவருக்கு பதில் முகமது சிராஜ் களமிறக்கப்பட்டார். தனக்கு கொடுத்த வாய்ப்பை மிகவும் சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட சிராஜ் மிகத் திறமையாக பந்துவீசி தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார் இதன் காரணமாக உமேஷ் யாதவிற்கு இந்திய அணியில் இருந்து இடம் பறிபோனது, இந்நிலையில் வருகிற நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து உமேஷ் யாதவ் தனது ஓய்வை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விருத்திமான் சஹா

இதுக்கு மேல முடியாது; டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டிக்கு பிறகு விடைபெற காத்திருக்கும் ஐந்து முக்கிய வீரர்கள் !! 6

தோனிக்கு பிறகு இந்திய அணியின் தேர்வாளர்கள் விக்கெட் கீப்பருக்கு முதன்மை வீரராக விருத்திமான் சஹாவை தான் தேர்வு செய்து வந்தனர். இந்நிலையில் இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தனக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை. இதன் காரணமாக இவருக்கு பதில் இந்திய அணியின் அதிரடி வீரரான ரிஷபந்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட ரிஷப் பண்ட் கச்சிதமாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்தார். மேலும் அதற்கு அடுத்தடுத்த போட்டியிலும் தனது அபார திறமையின் மூலம் இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். இதன் காரணமாக இந்திய அணியிலிருந்து விருத்திமான் சஹா ஒரு பேக்கப் வீரராக மட்டுமே திகழ்ந்து வருகிறார்.மேலும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி ஸ்குவாடில் இடம் பெற்றாலும் ரிஷப் பண்ட் பிளேயிங் லெவனில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் காரணமாக இவர் இந்தப் போட்டிக்குப் பிறகு சஹா தனது ஓய்வை அறிவித்து விடுவார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *