வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்திருக்க வேண்டிய 5 வீரர்கள்! 1

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகள் அணியுடன் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

எதிர்வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி மேற்கிந்திய தீவுகள் உடனான சுற்றுப்பயணம் துவங்குகிறது. இந்த சுற்றப்பயணத்திற்கு இந்திய அணியில் டோனி இடம்பெறுவாரா என்ற கேள்விகள் எழுந்து வந்த நிலையில், நேற்றைய தினம் டோனியின் இரண்டு மாத விடுப்பு குறித்த தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று மேற்கிந்திய சுற்றப்பயணத்திற்கான அணியினை BCCI வெளியிட்டுள்ளது.

மூன்று ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் அணி

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்திருக்க வேண்டிய 5 வீரர்கள்! 2

விராட் கோலி, ரோஹித் சர்மா, சிகர் தவான், KL ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், கேதர் ஜாதவ், மொகமது ஷமி, புவனேஸ்வர் குமார், கலீல் அகமது, நவ்தீப் சாய்னி

இரண்டு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் அணி–

விராட் கோலி, ரஹானே, மயங்க் அகர்வால், ராகுல், புஜாரா, ஹனுமான் விஹாரி, ரோகித் ஷர்மா, ரிஷாப் பன்ட், விரத்திமன் சாஹா, அஷ்வின், ரவிச்சந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், இசாந்த் சர்மா, மொகமது ஷமி, ஜாஸ்பிரிட் பூம்ரா, உமேஷ் யாதவ்.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்திருக்க வேண்டிய 5 வீரர்கள்! 3

மூன்று டி20 போட்டியில் பங்கேற்கும் அணி–

விராட் கோலி, ரோகித் ஷர்மா, சிகர் தவான், ராகுல், ஸ்ரேயஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, குர்ணல் பாண்டையா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சஹர், புவனேஷ்வர் குமார், கலீல் அகமது, தீபக் சஹர், நவ்தீப் சயினி.

அறிவிக்கப்பட்டுள்ள டெஸ்ட் அணி நன்றாக இருக்கிறது. ஆனால் அந்த அணியில் புதிய உள்ளூர் இளம் முகத்திற்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். ஹைதராபாத் அணியின் இளம் விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத்திற்கு வாய்ப்பு கொடுத்து அவரை சற்று அனுபவம் அடையச்செய்திருக்கலாம்.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்திருக்க வேண்டிய 5 வீரர்கள்! 4

ஒருநாள் போட்டி அவர் போட்டியை பொறுத்தவரை கண்டிப்பாக சில நல்ல மாற்றங்களை எடுத்திருக்க வேண்டும். மிடில் ஆர்டடில் அஜிங்கியா ரஹானேவை மீண்டும் எடுத்திருக்கலாம். ஆனால், கண்டிப்பாக சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் . ஏனெனில் அவர் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் அற்புதமாக ஆடி வருகிறார். வேகப்பந்து வீச்சாளராக ஆவேஷ் கானுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். ஒருநாள் போட்டியில் க்ருனால் பாண்டியாவிற்கு வாய்ப்பு வழங்கி இருக்கலாம்.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்திருக்க வேண்டிய 5 வீரர்கள்

  1. அஜிங்கியா ரஹானே (ஒருநாள் தொடரில் இருந்திருக்கலாம்)
  2. ஆவேஷ் கான் (டி20)
  3. சுப்மன் கில் (ஓருநாள் மற்றும் டி20)
  4. க்ருனால் பாண்டியா (ஓருநாள் )
  5. ஸ்ரீகர் பரத்திற்கு (டெஸ்ட்)

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *