சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடர்களில் கடுமையாக சொதப்பிய 5 அற்புதமான வீரர்கள் 1

சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடர்களில் கடுமையாக சொதப்பிய 5 அற்புதமான வீரர்கள்

கோடை இன்னமும் கூட தன் முழு வெப்பத்தை காட்ட தொடங்கவில்லை. ஆனால், அரசியல் களத்தில் தேர்தல் சூடுபிடித்து தகித்து கொண்டிருக்க, விளையாட்டு களத்தில் ஐபிஎல் தொடங்குவதால் ரசிகர்களுக்கு “மஞ்சள் ஜுரம்” தொற்றிக்கொண்டது. ஆமாம், ஐபிஎல் தொடரில் அசைக்க முடியாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு சில ஆண்டுகளில் வெறித்தனமான ரசிகர்கள் அதிகரித்து இருக்கிறார்கள். இதற்கெல்லாம் ஒரே காரணம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. மேலும் ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்கென பெர்பான்ஸ் ரெக்கார்டு அசைக்க முடியாதது. கடந்த ஆண்டு இரண்டு ஆண்டுகள் தடையையும் தாண்டி சாம்பியன் பட்டம் வென்றது சிஎஸ்கே.சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடர்களில் கடுமையாக சொதப்பிய 5 அற்புதமான வீரர்கள் 2

இதனால்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிஎஸ்கே அணியினரின் பயிற்சியை பார்ப்பதற்காகவே 12 ஆயிரம் ரசிகர்கள் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் குவிந்தார்கள். இதற்கெல்லாம் காரணம் 2010, 2011, 2018 சாம்பியன் மேலும் 4 முறை இறுதிச்சுற்று 2008, 2012, 2013, 2015 என ஐபிஎல் போட்டித் தொடரில் அனைத்து அணிகளுக்கும் தண்ணி காட்டும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. பின்பு மற்ற அணிகள் எல்லாம் இளம் வீரர்களை வைத்து விளையாடும் போதிலும், சிஎஸ்கே அணி மட்டும் 35 ப்ளஸ் வீரர்களை வைத்து விளையாடி சாம்பியன் ஆகும். அதேபோல ஷேன் வாட்சன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்றாலும் கடந்தாண்டு ஐபிஎல்-லில் அதிரடி காட்டினார்

தைமல் மில்ஸ்

சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடர்களில் கடுமையாக சொதப்பிய 5 அற்புதமான வீரர்கள் 3

கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் இங்கிலாந்தில் நடந்த டி20 தொடரில் அற்புதமாக பந்துவீசினார். டி20யில் 80 போட்டிகளில் ஆடி 90 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதன் சராசரி 24 மட்டுமே இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர் ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளாலும் 2017 ஆம் ஆண்டு ஏலத்தில் எடுக்க போட்டா போட்டியில் இறக்கப்பட்டவர். பின்னர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் 12 கோடிக்கு எடுக்கப்பட்டார். ஆனால் அந்த தொடரில் பெங்களூரு அணி எட்டாவது இடத்தை மட்டுமே பிடித்தது மேலும் இவர் பெரிதாக ஏதும் செய்யவில்லை.

 

டிம் சவுதி

சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடர்களில் கடுமையாக சொதப்பிய 5 அற்புதமான வீரர்கள் 4

நியூஸிலாந்து நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான இவர் சர்வதேச அளவில் நல்ல பெயர் பெற்றவர். கடந்த 2017 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியால் இவர் எடுக்கப்பட்டார் .ஆனால் அந்த தொடரில் கடுமையாக சொதப்ப அடுத்த வருடம் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏலத்தில் எடுக்கப்படடார். அங்கும்கடுமையாக சோதனை வைத்திருக்கிறார் இவர்.

இயான் மார்கன்

இங்கிலாந்து நாட்டின் கேப்டன் ஆன இவருக்கு டி20 போட்டிகளில் சரியாக ஒத்துவரவில்லை. 2017 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் இவர் வாங்கப்பட்டார். அந்த அணியில் சராசரியாக 22 மட்டுமே அடித்திருந்தார். அதற்கு முன்னதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடினார் .ஆனால் ஐபிஎல் தொடரில் இவர் சொதப்பியது மட்டுமே மிச்சம்.

சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடர்களில் கடுமையாக சொதப்பிய 5 அற்புதமான வீரர்கள் 5

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு அணிக்கு தாவி கொண்டிருக்கிறார். சென்ற வருடம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடியவர் 8 போட்டிகளில் ஆடி வெறும் 65 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார்.

சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடர்களில் கடுமையாக சொதப்பிய 5 அற்புதமான வீரர்கள் 6

டேவிட் மில்லர்

சென்ற வருடம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடிய இவர் மூன்று போட்டிகளில் ஆடி வெறும் 74 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடர்களில் கடுமையாக சொதப்பிய 5 அற்புதமான வீரர்கள் 7

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *