இந்தாளு பன்றதெல்லாம் ஒரு கமென்ட்ரியா? சஞ்சய் மாஞ்சரேக்கர் மீது ஐசிசியில் புகார் கடிதம்! 1

உலகக் கோப்பை கிரிக்கெட் வர்ணனையின் போது ஒரு சார்பாக பேசி வருவதாக இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சிரேகர் மீது ஒரு ரசிகர் புகார் எழுப்பியுள்ளார்.

உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்களை வர்ணனையாளர்களாக அறிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சிரேகர் இடம்பெற்றுள்ளார். போட்டியின் போது இவர் கூறும் கருத்துகள் பலமுறை விமர்சிக்கப்பட்டுள்ளன.

 

https://twitter.com/adityeah/status/1142275772180156416

 

இந்நிலையில் நடப்பு உலகக் கோப்பை தொடரில் சஞ்சய் மஞ்சிரேகரின் வர்ணனை குறித்து ஒரு இளைஞர் ஆஸ்திரேலியாவிலிருந்து ஐசிசிக்கு புகார் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில், “உங்கள் வர்ணனையாளர்கள் பட்டியலிலுள்ள சஞ்சய் மஞ்சிரேகரின் வர்ணனை மிகவும் ஒரு சார்பாக உள்ளது. இவர் மிகவும் முறைகேடாக வர்ணனை செய்து வருகிறார். எனவே அவருடைய வர்ணனை எனக்குப் பிடிக்கவில்லை” என எழுதியுள்ளார்.

முன்னதாக சஞ்சய் மஞ்சிரேகர், “தோனி எங்கள் அணிக்கு ஸ்டெம்பிற்கு பின்னால் இருக்கும் கண்கானிப்பாளர்” எனக் குறிப்பிட்டிருந்தார். இது ஒரு அணி சார்பாக உள்ளது என அந்த ரசிகர் குற்றச்சாட்டி ட்வீடை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

https://twitter.com/adityeah/status/1142288643286921217

 

இந்நிலையில், ஒருநாள் போட்டியில் விராட் கோலி 37 ரன்களை எட்டியபோது, குறைந்த இன்னிங்ஸில் சர்வதேச போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். போட்டி தொடங்கும் போது விராட் கோலி ஒட்டுமொத்தமாக சர்வதேச அளவில் 19 ஆயிரத்து 963 ரன்களுடன் இருந்தார்.  37 ரன்கள் எடுத்தபோது, மிகக்குறைந்த போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் எனும் பெருமையையும், சாதனையையும், புதிய வரலாற்றையும் கோலி படைத்தார். கோலி 417 இன்னிங்ஸ்களில் (131 டெஸ்ட், 224 ஒருநாள் போட்டி, 62 டி20) விளையாடி 20 ஆயிரம் ரன்களை சேர்த்துள்ளார்.

இந்தாளு பன்றதெல்லாம் ஒரு கமென்ட்ரியா? சஞ்சய் மாஞ்சரேக்கர் மீது ஐசிசியில் புகார் கடிதம்! 2
“NEW DELHI, INDIA – AUGUST 28: Former Indian cricketers and commentators for the upcoming Twenty20 world cup Saurav Ganguly, (L) and Sanjay Manjrekar speak at a press conference in New Delhi on August 28,2012. ESPN-STAR Sports said it had syndicated broadcast rights of World Twenty20 cricket to 218 territories across the world on August 28, 2012 in New Delhi, India. (Photo by Mohd Zakir/Hindustan Times via Getty Images)”

கோலி சேர்த்துள்ள  20,000 ரன்களில், 12 ஆயிரத்து 121 ரன்கள் ஒருநாள் போட்டியிலும், டெஸ்ட் போட்டியில் 6 ஆயிரத்து 613 ரன்களும், டி20 போட்டியில் 2,263 ரன்களும் சேர்த்துள்ளார். முன்னதாக சச்சின், லாரா, பாண்டிங் ஆகியோர் இந்த சாதனையை செய்துள்ளனர். அதாவது, சச்சின், லாரா இருவரும் தங்களின் சர்வதேசப் போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை 453 இன்னிங்ஸ்களில் அடைந்தனர். ரிக்கி பாண்டிங் 468 இன்னிங்ஸ்களில் அடைந்திருந்தார். தற்போது கோலி 417 இன்னிங்ஸ்களில் சாதனைப் படைத்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *