அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா ? ஆகாஷ் சோப்ராவின் பதில் !

14வது ஐபிஎல் சீசன் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதுவரை 29 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 போட்டிகளில் 6 வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.

இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பெங்களூர் அணியும் தலா 10 புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடத்தில் இருக்கிறது. இந்த சீசனில் சிஎஸ்கே டெல்லிக்கு எதிராக முதல் போட்டியில் தோல்வி அடைந்தாலும். இதன்பிறகு கொல்கத்தா, ராஜஸ்தான், பெங்களூர், பஞ்சாப், ஹைதராபாத் ஆகிய அணிகளை வென்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா ? ஆகாஷ் சோப்ராவின் பதில் ! 2

இந்த சீசனில் மொயின் அலி, சுரேஷ் ரெய்னா வருகையால் சிஎஸ்கேவின் பேட்டிங் பிரச்சனை முடிந்தது. குறிப்பாக மொயின் அலி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செய்லபட்டு வருகிறார். இந்நிலையில், 2022ம் ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடர் மிகப்பெரிய தொடராக நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். மேலும் இரண்டு புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகளுடன் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இதனால் அடுத்தாண்டு அனைத்து அணிகளையும் கலைத்துவிட்டு மிகப்பெரிய ஏலத்தின் மூலம் வீரர்களை புதிதாக வீரர்களை தேர்வு செய்ய இருக்கிறார்கள். இந்நிலையில், தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்காமல் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா ? ஆகாஷ் சோப்ராவின் பதில் ! 3

இதுகுறித்து கடந்த சில மாதங்களுக்கு பேசிய சிஎஸ்கே சிஇஓ “தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியிருந்தார். தற்போது இதுகுறித்து யூடியூப்பில் பேசிய ஆகாஷ் சோப்ரா “தோனி அடுத்த சீசனில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் நிறைவு தான். தோனி கடந்த மூன்று வருடங்களாக கிரிக்கெட் விளையாடுவதில்லை.

இவ்வாறு மூன்று வருடங்களாக வாளையாடத வீரரை நீங்கள் 15 கோடி ருபாய்க்கு எடுப்பீர்களா ? அதேசமயத்தில் இவரை போன்ற ஒரு வீரர் எங்கும் கடைக்க மாட்டார். இதை பற்றி தோனி என்ன நினைக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை” என்று கூறியிருக்கிறார் ஆகாஷ் சோப்ரா.

அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா ? ஆகாஷ் சோப்ராவின் பதில் ! 4

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *