அந்த இந்திய வீரருக்கு நடந்தது மிகப்பெரும் அநியாயம்; முன்னாள் வீரர் ஆதங்கம் !! 1

அந்த இந்திய வீரருக்கு நடந்தது மிகப்பெரும் அநியாயம்; முன்னாள் வீரர் ஆதங்கம்

சீனியர் வீரர்களில் ஒருவரான ரஹானே இந்திய அணியில் இருந்து முழுவதுமாக புறக்கணிப்பட்டது வேதனையான விசயம் என ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு கிடைத்த மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ரஹானேவும் ஒருவர் என்றால் அது மிகையாகாது. போட்டியின் தன்மையை உணர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ரஹானே, இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்ந்தார்.

அந்த இந்திய வீரருக்கு நடந்தது மிகப்பெரும் அநியாயம்; முன்னாள் வீரர் ஆதங்கம் !! 2

கிரிக்கெட் நுனுக்கங்கள் பலவற்றை அறிந்து வைத்திருக்கும் ரஹானே, உள்நாட்டில் விட வெளிநாடுகளில் நடக்கும் தொடர்களில் தொடர்ந்து மிகச்சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். ரோஹித் சர்மா, கோஹ்லி போன்ற முக்கிய வீரர்கள் சொதப்பிய தொடர்களில் கூட ரஹானே தனது பங்களிப்பை இந்திய அணிக்கு சரியாகவே செய்து கொடுத்தார்.

அந்த இந்திய வீரருக்கு நடந்தது மிகப்பெரும் அநியாயம்; முன்னாள் வீரர் ஆதங்கம் !! 3

ரஹானே தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த போதிலும், கடந்த 2018ம் ஆண்டில் திடீரென இந்திய ஒருநாள் அணியில் இருந்து முற்றிலுமாக புறக்கணிப்பட்டார். நிதான ஆட்டத்தின் காரணமாகவே ரஹானே அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. ஐ.பி.எல் போன்ற தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை ரஹானே வெளிப்படுத்திய போதிலும் ரஹானேவால் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில், ரஹானே குறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ரஹானே இந்திய அணியில் இருந்து திடீரென ஓரங்கட்டப்பட்டது வேதனையான விசயம் என்று தெரிவித்தார்.

அந்த இந்திய வீரருக்கு நடந்தது மிகப்பெரும் அநியாயம்; முன்னாள் வீரர் ஆதங்கம் !! 4

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசியதாவது;

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரஹானே தொடர்ந்து சிறப்பாகவே விளையாடி வந்தார். நல்ல ஸ்ட்ரைக் ரேட்டுகளை வைத்திருந்த நிலையிலும் ரஹானே அணியில் இருந்து முழுவதுமாக புறக்கணிப்பட்டது சரியான முறை அல்ல. அவரை அணியில் இருந்து நீக்கயதற்கு எந்த காரணமும் இருப்பதாக நான் கருதவில்லை. ரஹானேவை நீக்கியது என்னை பொறுத்தமட்டில் தவறான முடிவு. அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *